தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-540

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

540.

(திர்மிதி: 540)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ

بِنَحْوِهِ

وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَجَابِرٍ: «حَدِيثُ أُمِّ عَطِيَّةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ العِلْمِ إِلَى هَذَا الحَدِيثِ، وَرَخَّصَ لِلنِّسَاءِ فِي الخُرُوجِ إِلَى العِيدَيْنِ وَكَرِهَهُ بَعْضُهُمْ “، وَرُوِي عَنِ ابْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ: «أَكْرَهُ اليَوْمَ الخُرُوجَ لِلنِّسَاءِ فِي العِيدَيْنِ، فَإِنْ أَبَتِ المَرْأَةُ إِلَّا أَنْ تَخْرُجَ فَلْيَأْذَنْ لَهَا زَوْجُهَا أَنْ تَخْرُجَ فِي أَطْمَارِهَا وَلَا تَتَزَيَّنْ، فَإِنْ أَبَتْ أَنْ تَخْرُجَ كَذَلِكَ فَلِلزَّوْجِ أَنْ يَمْنَعَهَا عَنِ الخُرُوجِ» وَيُرْوَى عَنْ عَائِشَةَ، قَالَتْ: «لَوْ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ المَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بني إسرائيل » وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ: «أَنَّهُ كَرِهَ اليَوْمَ الخُرُوجَ لِلنِّسَاءِ إِلَى العِيدِ»





 

 


இத்தலைப்பில் இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோரிடமிருந்தும் செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அபூ ஈஸா (இமாம் திர்மிதீ) கூறுகிறார்: உம்மு அத்திய்யா (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தைச் சார்ந்ததாகும்.

மார்க்க அறிஞர்களில் சிலர் இந்த ஹதீஸின் கருத்தையே ஏற்றுக்கொண்டு, பெண்கள் இரு பெருநாட்களுக்கும் வெளியே செல்வதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் வேறு சிலர் இதனை விரும்பத்தக்கதாகக் கருதவில்லை.

இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: இன்றைய காலத்தில் பெண்கள் இரு பெருநாட்களுக்கும் வெளியே செல்வதை நான் விரும்பவில்லை. ஒரு பெண் சென்றுதான் தீருவேன் என்று வற்புறுத்தினால், அவள் எளிய ஆடைகளை அணிந்தும், எந்த அலங்காரமும் செய்யாமலும் செல்ல அவளது கணவர் அனுமதிக்கலாம். அவ்வாறு செல்ல அவள் மறுத்தால், அவளை வெளியே செல்லவிடாமல் தடுக்க கணவருக்கு உரிமையுண்டு.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: பெண்கள் உருவாக்கியுள்ள புதிய பழக்கவழக்கங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால், இஸ்ரவேலர்களின் பெண்கள் தக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் பள்ளிவாசலுக்கு வருவதிலிருந்து தடுத்திருப்பார்கள்.

சுஃப்யான் அத்-தவ்ரீ (ரஹ்) அவர்களும் இன்றைய காலத்தில் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வெளியே செல்வதை விரும்பத்தக்கதாகக் கருதவில்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.