தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4365

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட்டு, வேறு உலக காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வை திக்ர் செய்துவிட்டு, பிறகு நான்கு ரக்அத்கள் ளுஹாத் தொழுகை தொழுதால், அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தில் அவருக்கு எந்த பாவமும் இல்லாததுபோன்று, அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேறிவிடுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(abi-yala-4365: 4365)

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا طِيبُ بْنُ سَلْمَانَ، قَالَ: سَمِعْتُ عَمْرَةَ تَقُولُ: سَمِعْتُ أُمَّ الْمُؤْمِنِينَ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

مَنْ صَلَّى الْفَجْرَ ـ أَوْ قَالَ: الْغَدَاةَ ـ فَقَعَدَ فِي مَقْعَدِهِ فَلَمْ يَلْغُ بِشَيْءٍ مِنْ أَمْرِ الدُّنْيَا، وَيَذْكُرُ اللَّهَ حَتَّى يُصَلِّيَ الضُّحَى أَرْبَعَ رَكَعَاتٍ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ لَا ذَنْبَ لَهُ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4365.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4302.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–

அம்ரா என்பவர் அம்ரா பின்த் அர்தாத் ஆவார் என்று தப்ரானீ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


3 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ரா பின்த் அர்தாத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4365, அல்முஃஜமுல் அவ்ஸத்-5940,


  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/549,


الكامل في ضعفاء الرجال (1/ 549):
حَدَّثَنَا عَبد اللَّه بْنُ مُحَمد بْنِ يَعْقُوبَ البُخارِيّ، حَدَّثَنا مُوسَى بْنُ أَفْلَحَ بْنِ خَالِدٍ أَبُو عِمْرَانَ البُخارِيّ، حَدَّثَنا أَبُو حُذَيْفَةَ إِسْحَاقُ بْنُ بِشْرٍ البُخارِيّ، حَدَّثَنا سُفْيَانُ الثَّوْريّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ: مَنْ صَلَّى الْفَجْرَ يَوْمَ الْجُمُعَةِ، ثُمَّ وَحَدَّ اللَّهَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، غَفَرَ اللَّهُ عز وجل مَا سَلَفَهُ، وَأَعْطَاهُ اللَّهُ أَجْرَ حَجَّةٍ وَعُمْرَةٍ، وَكَانَ ذَلِكَ أَسْرَعَ ثَوَابًا، وَأَكْثَرَ مَغْنَمًا.

  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7027-இஸ்ஹாக் பின் பிஷ்ர்-அபூஹுதைஃபா என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனவும், விடப்பட்டவர் எனவும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான்-2/44)

  • 2 . மேலும் ராவீ-25933-அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் யஃகூப் என்பவரை பலவீனமானவர் என்றும் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் எனவும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-4571)

எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-586.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.