தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4804

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழ எழுந்தார். அப்போது (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்” எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத்-இப்னு அபூஅதீக் (ரஹ்)

(abi-yala-4804: 4804)

حَدَّثَنَا أَبُو مُوسَى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا أَبُو حَزْرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ:

كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامٍ، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4804.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4736.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45928-மூஸா பின் முஹம்மது பின் ஸயீத் பின் ஹய்யான் என்பவர் பற்றி, இவரிடமிருந்து ஆரம்பத்தில் அபூஸுர்ஆ அவர்கள் ஹதீஸை அறிவித்தாலும் பிறகு அறிவிப்பதை விட்டு விட்டார்கள் என்று இப்னு அபீஹாதிம் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியிருந்தாலும் சில இடங்களில் இவர் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து முஹம்மது பின் இஸ்ஹாக், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹஸன், அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஆகியோர் சரியான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்று கதீப் பக்தாதீ கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/161, அஸ்ஸிகாத்-9/161, தாரீகு பக்தாத்-7001, தாரீகுல் இஸ்லாம்-5/946)

(குறிப்பு: மேற்கண்ட செய்தியின் முதல் அறிவிப்பாளர் அபூமூஸா என்று சில பிரதிகளிலும், மூஸா என்று சில பிரதிகளிலும் உள்ளது)

மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.