தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-6192

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை விட்டு காப்பாற்றும்படி உன்னிடம் கேட்கிறார். எனவே என்னை விட்டு அவரைக் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், அல்லாஹ்விடம் ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார்  என்னை உன்னிடம் கேட்டுள்ளார். எனவே அவரை என்னுள் நுழையச் செய்வாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(abi-yala-6192: 6192)

حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ يُونُسَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ فِي يَوْمٍ، إِلَّا قَالَتِ النَّارُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا قَدِ اسْتَجَارَكَ مِنِّي فَأَجِرْهُ، وَلَا يَسْأَلُ اللَّهَ عَبْدٌ الْجَنَّةَ فِي يَوْمٍ سَبْعَ مَرَّاتٍ، إِلَّا قَالَتِ الْجَنَّةُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا سَأَلَنِي فَأَدْخِلْهُ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6192.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6155.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49794-யூனுஸ் பின் கப்பாப் என்பவர் பற்றி சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் இவர் ராஃபிளா கொள்கையில் ஊறிப்போனவர்; உஸ்மான் (ரலி) அவர்களை திட்டக்கூடியவர்; இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை நம்பகமானவர் என்றும் தவறிழைப்பவர் என்றும், ராஃபிளா கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/468, தக்ரீபுத் தஹ்தீப்-1/1098)

இந்த செய்தியை அபூஅல்கமா அவர்களிடமிருந்து பலமானவரான யஃலா பின் அதாஃ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்கள் கூற்றாகத்தான் அறிவித்துள்ளார். (பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702)

இந்த செய்தியில் ஜரீர் பின்அப்துல்ஹமீத் அவர்களுக்கும், யூனுஸ் என்பவருக்கும் இடையில் லைஸ் பின் அபூஸுலைம் விடப்பட்டுள்ளார். (பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-213)

மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.