தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-669

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

669. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.

“என் உயிர் யார் கையிலுள்ளதோ (அல்லது இந்த முஹம்மதின் (ஸல்) உயிர் யார் கையிலுள்ளதோ) அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. உங்கள் உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தும் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : (ரலி)

ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)

ஸுபைர் பின் அவ்வாம்-அல்மதனீ (ரலி) – Zubayr ibn al-Awwam

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸுபைர் பின் அவ்வாம் பின் குவைலித் பின் அஸத் பின் அப்துல் உஸ்ஸா பின் குஸய்யி பின் கிலாப் பின் முர்ரா

தந்தை பெயர்: அவ்வாம் பின் குவைலித்

வம்சம்: குரைஷீ, அஸதீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், ஹவாரிய்யுன் நபி (நபி (ஸல்) அவர்களின் சீடர்)

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 28, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 36, பஸரா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸுபைர் பின் அவ்வாம் ரலி அவர்கள் நபித்தோழர் ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் அத்தை ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகன். சுவர்க்கம் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் வாளை உருவியவர் இவரே. பத்ர் உட்பட நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துப் போர்களிலும் கலந்துகொண்டார். ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு பஸரா அருகே ஷஹீதாக்கப்பட்டார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், உர்வா பின் அஸ்ஸுபைர், அஹ்னஃப் பின் கைஸ், கைஸ் பின் அபூஹாஸிம், மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான், மைமூன் பின் மெஹ்ரான், நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம், ஹஸன் அல் பஸரீ, முஸ்லிம் பின் ஜுன்துப் அல்ஹுதலீ, அபூ ஜர்வ் அல்மாஸினீ, அபூ ஹகீம், உம்மு அதா

வேறு பெயர்கள்: அபூ அப்துல்லாஹ், அஸ்ஸுபைர்


ஆதாரம்: muslimscholars.info (7) · Should verify


حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ، أَنَّ مَوْلًى، لِآلِ الزُّبَيْرِ حَدَّثَهُ، عَنِ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

دَبَّ إِلَيْكُمْ دَاءُ الْأُمَمِ قَبْلَكُمُ: الْحَسَدُ وَالْبَغْضَاءُ، وَهِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ: حَالِقَةُ الشَّعَرِ، وَلَكِنْ حَالِقَةُ الدَّيْنِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَلَا أُنَبِّئُكُمْ بِمَا يُثْبِتُ ذَلِكَ لَكُمْ؟ أَفْشُوا السَّلَامَ


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-661.
Abi-Yala-Shamila-669.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-660.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுபைரின் அடிமை என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-2510 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.