தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1201

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்:

பயணி எப்போது (நான்கு ரக்அத்) தொழுகையை (இரண்டாக) சுருக்கித் தொழலாம்?

1201. நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்:  (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே (“மூன்று மைல்கள்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.

யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


بَابُ مَتَى يَقْصُرُ الْمُسَافِرُ؟

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ:

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ أَنَسٌ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ – شَكَّ شُعْبَةُ – يُصَلِّي رَكْعَتَيْنِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1201.
Abu-Dawood-Alamiah-1015.
Abu-Dawood-JawamiulKalim-1017.

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஹம்மத் பின் பஷ்ஷார்

முஹம்மத் பின் பஷ்ஷார்-அல்அப்தீ (ரஹ்) – Muhammad bin Bashar Bindar

இறப்பு: ஹிஜ்ரி 252

தரம்: பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் பஷ்ஷார் பின் உஸ்மான் பின் தாவூத் பின் கைஸான்

தந்தை பெயர்: பஷ்ஷார் பின் உஸ்மான்

வம்சம்: அல்அப்தீ

புனைப்பெயர்: அபூ பக்ர், பந்தார்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 167, பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 252

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

முஹம்மத் பின் பஷ்ஷார் ரஹ் அவர்கள் ஒரு பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். இவர் ஹிஜ்ரி 167 இல் பஸராவில் பிறந்தார். ஹதீஸ் தேடி பயணம் செய்ய இவரது தாய் தடுத்தபோது, அவர் தாய்க்கு கட்டுப்பட்டார்.

இமாம் முஸ்லிம் ரஹ் அவர்கள் இவரிடமிருந்து 460 ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார். இவர் ஹிஜ்ரி 252 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல் வஹ்ஹாப் பின் அப்துல் மஜீத் அஸ்ஸகஃபீ, முஹம்மத் பின் ஜஃபர் ஃகந்தர், ரூஹ் பின் உபாதா பின் அல்அலா, ஹர்மீ பின் உமாரா, முஹம்மத் பின் அபீ அதீ, முஆத் பின் ஹிஷாம் பின் அபீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, ஸுலைமான் பின் தாவூத் பின் அல்ஜாரூத், யஸீத் பின் ஸுரைஃ, யஸீத் பின் ஹாரூன், ஜஃபர் பின் அவ்ன் பின் ஜஃபர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, இப்னு மாஜா, ஸகரிய்யா பின் யஹ்யா அஸ்ஸாஜீ, அபூ ஸுர்ஆ அர்ராஸீ, அபூ ஹாதிம் அர்ராஸீ, இப்னு அபீ துன்யா, அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல், அபூ கலீஃபா அல்ஃபள்ல் பின் அல்கபாப்

வேறு பெயர்கள்: பந்தார், முஹம்மத் பின் பஷ்ஷார் பந்தார், பின் பஷ்ஷார்


ஆதாரம்: muslimscholars.info (30160) · Should verify

ஃகுன்தர்-முஹம்மத் பின் ஜஃபர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷுஅபா

شعبة بن الحجاج

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

தரம்: மிகப் பலமானவர், நினைவாற்றல் மிக்கவர், துல்லியமானவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

வம்சம்: அல்அஸ்தீ, மவ்லா

புனைப்பெயர்: அபூபஸ்தாம்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: வாஸித், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 82, வாஸித்

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான, நினைவாற்றல் மிக்க, துல்லியமான, வணக்கசாலியான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் ஹிஜ்ரி 82ல் வாஸித் நகரில் பிறந்தார். பஸரா நகரில் வசித்து, ஹிஜ்ரி 160ல் அங்கேயே மரணமடைந்தார்.

ஈராக்கில் ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து, பலவீனமானவர்களை ஒதுக்கிய முதல் அறிஞர் இவரே. ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ இவரை 'ஹதீஸ் கலையின் அமீருல் முஃமினீன்' என்று புகழ்ந்துள்ளார். இமாம் ஷாஃபிஈ அவர்கள் 'ஷுஅபா இல்லையென்றால் ஈராக்கில் ஹதீஸ் அறியப்பட்டிருக்காது' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): கதாதா, அய்யூப் அஸ்ஸக்தியானீ, இஸ்மாயீல் பின் அபூ காலித், அனஸ் பின் ஸீரீன், ஸாபித் பின் அஸ்லம் அல்பனானீ, ஹகம் பின் உதைபா, ஹம்மாத் பின் அபூ சுலைமான், காலித் அல்ஹத்தா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, சுலைமான் அல்அஃமஷ், மாலிக் இமாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், ஸஃத் பின் இப்ராஹீம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, வகீஉ பின் அல்ஜர்ராஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், யஸீத் பின் ஸரீஉ, இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (இப்னு அலிய்யா), ஹம்மாத் பின் உஸாமா

வேறு பெயர்கள்: ஷுஅபா, ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ், ஷுஅபா அல்க்தகீ


ஆதாரம்: muslimscholars.info (20020) · Should verify

யஹ்யா பின் யஸீத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.