பாடம்:
தொழுகையைச் சுருக்கித் தொழுவதற்கான பயணத் தொலைவு (தூரம்).
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே (“மூன்று மைல்கள்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 6
(முஸ்லிம்: 1230)باب المسافة التي يقصر فيها الصلاة
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، كِلَاهُمَا عَنْ غُنْدَرٍ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ»
Muslim-Tamil-1230.
Muslim-TamilMisc-1116.
Muslim-Shamila-691.
Muslim-Alamiah-1116.
Muslim-JawamiulKalim-1122.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . இப்னு அபூஷைபா, 3 . முஹம்மத் பின் பஷ்ஷார்.
4 . ஃகுன்தர்-முஹம்மத் பின் ஜஃபர்
5 . ஷுஅபா
6 . யஹ்யா பின் யஸீத்
7 . அனஸ் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஃகுன்தர் —> ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> யஹ்யா பின் யஸீத் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, முஸ்லிம்-1230, அபூதாவூத்-1201, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1551,
சமீப விமர்சனங்கள்