தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1413

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர்.

அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, “தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள்”. அவர்களுடன் நாங்களும் செய்வோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ஸுப்யான் ஸவ்ரீ அவர்கள் இந்த ஹதீஸின் காரணமாக மகிழ்ச்சியடைந்தார்கள் என அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியதாக அஹ்மத் பின் ஃபுராத் கூறினார்.

ஸுப்யான் ஸவ்ரீ அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம், அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார் என்பதினாலாகும் என்று அபூதாவூத் இமாம் கூறுகிறார்.

(அபூதாவூத்: 1413)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفُرَاتِ أَبُو مَسْعُودٍ الرَّازِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ، وَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ»

قَالَ عَبْدُ الرَّزَّاقِ: وَكَانَ الثَّوْرِيُّ يُعْجِبُهُ هَذَا الْحَدِيثُ، قَالَ أَبُو دَاوُدَ: «يُعْجِبُهُ لِأَنَّهُ كَبَّرَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1413.
Abu-Dawood-Shamila-1413.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1206.




(குறிப்பு: 1 . இந்தச் செய்தியை அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபுராத் —> அப்துர்ரஸ்ஸாக் —> அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் —> நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் பதிவு செய்துள்ளார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஃபுராத் அவர்கள், அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர் தான் என்றாலும் முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாகின் எழுத்துப் பிரதிகளில் “தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள்” என்ற வாக்கியத்தில் “தக்பீர் சொல்லி” என்ற வார்த்தை இல்லை. அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் இந்த அறிவிப்பை வைத்தே முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாகின் பிரதிகளில் கப்பர-“தக்பீர் சொல்லி” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.

2 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அத்தபரீ அவர்கள், கப்பர-“தக்பீர் சொல்லி” என்ற வார்த்தையில்லாமல் தான் அறிவித்துள்ளார்.

فضائل القرآن للمستغفري (2/ 800)
1292 – أخبرنا الجويباري، أخْبَرَنا أبو يعلى، حَدَّثَنا الدبري، عَن عَبد الرزاق، عَن عَبد الله بن عمر عن نافع عن ابن عمر قال: كان رسول الله صلى الله عليه وسلم يقرأ علينا القرآن فإذا مر بالسجدة يسجد فسجدنا معه.

(நூல்: ஃபளாஇலுல் குர்ஆன்-முஸ்தஃக்ஃபிரீ-1292)

3 . அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப், அபூநுஐம் பின் ஃபள்ல், ஹம்மாத் பின் காலித் ஆகியோரும் கப்பர-“தக்பீர் சொல்லி” என்ற வார்த்தையில்லாமல் தான் அறிவித்துள்ளனர்.

الجامع لابن وهب ت رفعت فوزي عبد المطلب (1/ 226)
373-[361] حدثنا بحر قال: قرئ على ابن وهب: أخبرك عبد الله بن عمر، عن نافع، عن عبد الله بن عمر قال:
كان رسول الله صلى الله عليه وسلم يقرأ علينا القرآن، فيقرأ السجدة فيسجد، ونسجد معه، وذلك في غير صلاة.

(நூல்கள்: அல்ஜாமிஉ-இப்னு வஹ்ப்-373 , அஹ்மத்-6461 …)

4 . நாஃபிஉ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் அவர்களின் சகோதரர்-உபைதுல்லாஹ் பின் உமர் அவர்கள் கப்பர-“தக்பீர் சொல்லி” என்ற வார்த்தையில்லாமல் தான் அறிவித்துள்ளார்.

எனவே ஸஜ்தா வசனங்களை ஓதினால் தக்பீர் கூறவேண்டும் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை என்று தெரிகிறது.


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25179-அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் அவர்கள் நல்லமனிதர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் ஆவார் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இவரைப் பற்றி அறிஞர்களின் கருத்து:

1 . யஹ்யா பின் ஸயீத்

யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்கவில்லை என்பதுடன்; இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார்.

3 . இப்னு ஸஃத்

இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் அதிகம் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். நினைவாற்றல் சரியில்லாததால் இவரை சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

4 . இப்னு மயீன்

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியதாகவும், பலவீனமானவர் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

5 . அஹ்மத்

இவர் நல்ல மனிதர், சுமாரானவர், (என்றாலும் மற்றவர்களின் செய்திகளைப் போல் இல்லாமல்) அறிவிப்பாளர்தொடரில் பெயரை கூட்டி அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

6 . புகாரீ

இவர் மிக பலவீனமானவர்; இவரிடமிருந்து நான் அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

7 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அர்ராஸீ

இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம். ஆனால் இவரை தனி ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

8 . இஜ்லீ

இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

9 . யஃகூப் பின் ஷைபா

இவர் பலமானவர்; உண்மையாளர் இவரின் சில ஹதீஸ்களில் குளறுபடி உள்ளது என்று கூறியுள்ளார்.

10 . நஸாயீ

இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

11 . உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியது போன்று கூறியுள்ளார்.

12 . இப்னு யூனுஸ்

இவர் பலமானவர்; (இவரின் தோற்றத்தைக் கண்டால் இவர் பலமானவர் என்று தெரிந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தோற்றத்தை வைத்து பலமானவர் என்று இவர் கூறியுள்ள காரணம் அறிஞர்களிடம் ஏற்கத்தக்கதல்ல)

13 . இப்னு ஹிப்பான்

இவர் நல்லமனிதர்; வணக்கசாலி. இதில் அதிகம் மூழ்கியதால் ஹதீஸை அறிவிப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டு அதிகம் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

14 . இப்னு அதீ

இவர் சுமாரானவர்; இவரிடமிருந்து இப்னு வஹ்ப், வகீஃ போன்ற பலமானவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்று கூறியுள்ளார்.

15 . அபூஅஹ்மத்-ஹாகிம்

இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

16 . அபூஅப்துல்லாஹ்-ஹாகிம்

இவரைப் பற்றியுள்ள ஒரே குறை நினைவாற்றல் சரியில்லாதவர் என்பது தான் என்று கூறியுள்ளார்.

17 . அபூயஃலா கலீலீ

இவர் பலமானவர்; என்றாலும் சில அறிஞர்கள் இவரின் அறிவிப்பை பொருந்திக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

18 . பைஹகீ

இவரை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

19 . இப்னு தாஹிர்

இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

20 . இப்னு ஹஜர்

இவர் பலவீனமானவர்; வணக்கசாலி என்று கூறியுள்ளார்.

21 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் தக்ரீபை ஆய்வு செய்த பஷ்ஷார், ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோர் இவர் பலவீனமானவர்; இவரின் செய்திகளை ஆய்வு செய்யவேண்டும்; மற்றவர்களும் இவரைப் போன்று அறிவித்தால் இவரின் செய்திகளை துணை ஆதாரமாகக் கூறலாம் என்று கூறியுள்ளனர். (இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
கலீலீ ஆகியோரின் கூற்றின்படியும், மற்ற அறிஞர்களின் விமர்சனத்தையும் இணைத்து இந்த முடிவைக் கூறியுள்ளனர்)

(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/233, தாரீகு பஃக்தாத்-11/194, தஹ்தீபுல் கமால்-15/327, அல்இக்மால்-8/75, அல்காஷிஃப்-3/159, தஹ்தீபுத் தஹ்தீப்-2/388, தக்ரீபுத் தஹ்தீப்-1/528, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-3489, 2/242)


1 . இந்தச் செய்தியில் வரும் தக்பீர் கூறினார்கள் என்ற வாசகத்தைத் தவிர மற்றவை வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

2 . அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் பலவீனமானவர்தான் என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலர் தக்பீர் கூறினார்கள் என்ற வாசகத்தை அறிவிக்கவில்லை.

இப்னு வஹ்ப், அபூநுஐம் பின் ஃபள்ல், ஹம்மாத் பின் காலித் ஆகியோரும் கப்பர-“தக்பீர் சொல்லி” என்ற வார்த்தையில்லாமல் தான் அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: அல்ஜாமிஉ-இப்னு வஹ்ப்-373, அஹ்மத்-6461 …)

எனவே இந்தச் செய்தியின் கருத்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள், (பலமானவரான) தனது சகோதரர் உபைதுல்லாஹ்வைப் போன்றே அறிவித்துள்ளார் என்று தெரிகிறது.


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் —> நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5911 , அபூதாவூத்-1413 , குப்ரா பைஹகீ-3772 ,

  • ஹம்மாத் பின் காலித் —> அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் —> நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-6461 ,

  • உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் —> நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-4669 , 6285 , புகாரி-107510761079 , முஸ்லிம்-10051006 , அபூதாவூத்-1412 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-808 , குப்ரா பைஹகீ-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.