நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டு பிறகு உலூச் செய்யாமல் தொழச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
இதை அன்னையாரிடமிருந்து அறிவிக்கின்ற உர்வா அவர்கள் தெரிவிக்கின்றார் உங்களைத் தவிர அது வேறு யாராகவும் இருக்க முடியாதே என்று நான் வினவியதற்கு அன்னையார் அவர்கள் சிரித்தார்கள்.
இமாம் அவூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
இவ்வாறே இதை சாயிதா என்பவரும், அப்துல் ஹமீது அல்ஹிம்மானி அவர்களும் சுலைமான் அல்அஃமஷ் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 179)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ حَبِيبٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ عُرْوَةُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ
قَالَ أَبُو دَاوُدَ: هَكَذَا رَوَاهُ زَائِدَةُ، وَعَبْدُ الْحَمِيدِ الْحِمَّانِيُّ، عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ
AbuDawood-Tamil-179.
AbuDawood-Shamila-179.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்