பாடம்: 71
ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! ஒருவர் உளூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுவும் அவரது (உடலிலுள்ள) ஒரு உறுப்புதானே?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஹிஷாம் பின் ஹஸ்ஸான், ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷுஅபா, இப்னு உயைனா, ஜரீர் அர்ராஸீ ஆகியோர், முஹம்மது பின் ஜாபிர் —> கைஸ் பின் தல்க் —> தல்க் பின் அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
(அபூதாவூத்: 182)71 – بَابُ الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ
قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ فَقَالَ: «هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْهُ»، أَوْ قَالَ: «بَضْعَةٌ مِنْهُ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَشُعْبَةُ، وَابْنُ عُيَيْنَةَ، وجَرِيرٌ الرَّازِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-182.
Abu-Dawood-Alamiah-155.
Abu-Dawood-JawamiulKalim-155.
1 . இந்தக் கருத்தில் தல்க் இப்னு அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-483 , அபூதாவூத்-182 , திர்மிதீ-85 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-165 , ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,
2 . அபூஉமாமா
3 . ஆயிஷா
4 . மர்ஸத் பின் ஸல்த்
5 . உமர் பின் லாஹிக்
6 . அலீ பின் ஷைபான்
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-82 ,
சமீப விமர்சனங்கள்