தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2549

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். அப்போது அவர்கள் எனக்கு ஒரு இரகசியத்தைச் சொன்னார்கள். அதை மக்களில் யாருக்கும் நான் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரு குன்றின் பின்னாலோ அல்லது பேரீச்சைத் தோட்டத்திலோ மறைந்துகொள்வதை விரும்புவார்கள். (இதை அறிவிப்பவர் கூறுகிறார்:) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரின் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு ஒட்டகம் இருந்தது. அது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும் (வேதனையுடன்) ஒலித்தது. அதன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று, அதன் தலைப்பகுதியைத் தடவிக் கொடுத்தார்கள். உடனே அது அமைதியானது. பிறகு நபி (ஸல்) அவர்கள், “இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இது யாருடையது?” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரி இளைஞர் ஒருவர் வந்து, “இது என்னுடையது, இறைத்தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனக்கு உரிமையாக்கியுள்ள இந்த விலங்கைப் பற்றி நீ அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா? நீ இதை பட்டினி போடுகிறாய் மேலும் இதை அதிகமாக வேலைவாங்குகிறாய் என்று இது என்னிடம் முறையிட்டுக்கொண்டது” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 2549)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيٌّ، حَدَّثَنَا ابْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ مَوْلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ:

أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ، فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا النَّاسِ، وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا، أَوْ حَائِشَ نَخْلٍ، قَالَ: فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ، فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ، فَقَالَ: «مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ، لِمَنْ هَذَا الْجَمَلُ؟»، فَجَاءَ فَتًى مِنَ الْأَنْصَارِ فَقَالَ: لِي يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا؟، فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2549.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-, இப்னு மாஜா-, அபூதாவூத்-2549, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17625,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.