ஓர் ஆண்டு எனக்கு (எங்கள் பகுதியில்) பஞ்சம் ஏற்பட்டது. நான் மதீனாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு தானியக் கதிரை எடுத்து உதிர்த்துச் சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்திற்குரியவர் வந்துவிட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று விபரம் கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள் தோட்டத்திற்குரியவரிடம் ‘இவர் பசியோடு இருந்தபோது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்தபோது இவருக்கு (திருடக்கூடாது என்று) கற்றுக் கொடுக்கவில்லை என்றார்கள். மேலும் எனது ஆடையை என்னிடம் திருப்பித்தருமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் அவர், எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவு தருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்பாத் பின் ஷுரஹ்பீல் (ரலி)
(அபூதாவூத்: 2620)حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عَبَّادِ بْنِ شُرَحْبِيلَ قَالَ:
أَصَابَتْنِي سَنَةٌ فَدَخَلْتُ حَائِطًا مِنْ حِيطَانِ الْمَدِينَةِ فَفَرَكْتُ سُنْبُلًا فَأَكَلْتُ، وَحَمَلْتُ فِي ثَوْبِي، فَجَاءَ صَاحِبُهُ فَضَرَبَنِي وَأَخَذَ ثَوْبِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: «مَا عَلَّمْتَ إِذْ كَانَ جَاهِلًا، وَلَا أَطْعَمْتَ إِذْ كَانَ جَائِعًا» – أَوْ قَالَ: «سَاغِبًا» – وَأَمَرَهُ فَرَدَّ عَلَيَّ ثَوْبِي وَأَعْطَانِي وَسْقًا أَوْ نِصْفَ وَسْقٍ مِنْ طَعَامٍ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2252.
Abu-Dawood-Shamila-2620.
Abu-Dawood-Alamiah-2252.
Abu-Dawood-JawamiulKalim-2255.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . உபைதுல்லாஹ் பின் முஆத்
3 . முஆத் பின் முஆத்-அல்அன்பரீ
4 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ்-அபூபஸ்தாம்
5 . ஜஃபர் பின் இயாஸ்-அபூபிஷ்ர்-யஷ்குரீ
6 . அப்பாத் பின் ஷுரஹ்பீல் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அப்பாத் பின் ஷுரஹ்பீல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … அஹ்மத்-17521, இப்னு மாஜா-2298, அபூதாவூத்-2620, 2621, நஸாயீ-5409,
சமீப விமர்சனங்கள்