தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2875

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பெரும் பாவங்கள் யாவை?’ என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு,

“முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது; உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்’ என்று (முன்னால் உள்ள ஹதீஸில் கூறப்பட்ட ஏழு பாவங்களுடன் கூடுதலாக இரண்டு பாவங்களை) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: உமைர் பின் கதாதா (ரலி)

(அபூதாவூத்: 2875)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوْزَجَانِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هَانِئٍ، حَدَّثَنَا حَرْبُ بْنُ شَدَّادٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ سِنَانٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِيهِ أَنَّهُ حَدَّثَهُ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ

أَنَّ رَجُلًا سَأَلَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْكَبَائِرُ؟ فَقَالَ: «هُنَّ تِسْعٌ»، فَذَكَرَ مَعْنَاهُ زَادَ: «وَعُقُوقُ الْوَالِدَيْنِ الْمُسْلِمَيْنِ، وَاسْتِحْلَالُ الْبَيْتِ الْحَرَامِ قِبْلَتِكُمْ أَحْيَاءً وَأَمْوَاتًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2490.
Abu-Dawood-Shamila-2875.
Abu-Dawood-Alamiah-2490.
Abu-Dawood-JawamiulKalim-2493.




إسناد ضعيف فيه عبد الحميد بن سنان الحجازي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–அப்துல் ஹமீத் பின் ஸினான் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தச் செய்தியை அய்யூப் பின் உத்பா என்பவர் தைஸலா பின் அலீ (மய்யாஸ்) அவர்களிடமிருந்து, தைஸலா பின் அலீ (மய்யாஸ்) —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(பார்க்க: குப்ரா பைஹகீ-6724)

அய்யூப் பின் உத்பா நினைவாற்றல் சரியில்லாதவர் என்று தான் விமர்சிக்கப்பட்டுள்ளார். இவர் விடப்பட்டவர் அல்ல என்ற காரணத்தைக் கூறி அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளார்.

(நூல்: இர்வாஉல் ஃகலீல்-690, 748)

என்றாலும் தைஸலா பின் மய்யாஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும், ஸியாத் பின் மிக்ராக் அவர்கள், கஃபா இறந்தவருக்கு கிப்லாவாகும் என்ற வாசகத்தை அறிவிக்கவில்லை. இதை நபியின் சொல்லாகவும் அறிவிக்கவில்லை.

(பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-8)

இவர் பலமானவர் என்பதால் அய்யூப் பின் உத்பா அறிவிப்பது முன்கரான செய்தியாகும்.


மேற்கண்ட செய்தியின் முதல் பகுதி:

பார்க்க: புகாரி-2766 .


2 . இறந்தவருக்கும் கஃபா, கிப்லாவாகும் என்ற கருத்தில் உமைர் பின் கதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2875 , அல்முஃஜமுல் கபீர்-101 , 102 , ஹாகிம்-197 , 7666 , குப்ரா பைஹகீ-6723 , 20752 ,


இந்தச் செய்தி பற்றிய விளக்கம்:

  • இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லாததால் கிப்லாவை நோக்கி இறந்தவரின் உடலைத் திருப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
  • மேலும் மேற்கண்ட ஹதீஸின் கருத்திலும் குழப்பம் உள்ளது.
  • உயிருள்ளவருக்கும், இறந்தவர்களுக்கும் கிப்லா என்று கூறப்பட்டுள்ளது. உயிருள்ளவருக்கு கிப்லா என்றால் 24 மணி நேரமும் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். தொழும் போது கிப்லாவை நோக்க வேண்டும் என்றே புரிந்து கொள்வார்கள்.
  • அது போல் இறந்தவர்களுக்கு கிப்லா என்றால் இறந்தவர் தொழும் போது அதை நோக்க வேண்டும் என்ற கருத்து வரும். இறந்தவருக்கு தொழுகை இல்லை. தொழ முடியாது எனும் போது இறந்தவர்களுக்கு கிப்லா என்பதும் பொருளற்றதாகி விடுகிறது.

எனவே நமது வசதிக்கு ஏற்ப இறந்தவரின் உடலை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்.


மேலும் பார்க்க: புகாரி-2766 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.