தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3159

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹுஸைன் பின் வஹ்வஹ்

(அபூதாவூத்: 3159)

حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُطَرِّفٍ الرُّؤَاسِيُّ أَبُو سُفْيَانَ، وَأَحْمَدُ بْنُ جَنَابٍ، قَالَا: حَدَّثَنَا عِيسَى – قَالَ أَبُو دَاوُدَ: هُوَ ابْنُ يُونُسَ – عَنْ سَعِيدِ بْنِ عُثْمَانَ الْبَلَوِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ الْحُصَيْنِ بْنِ وَحْوَحٍ،

أَنَّ طَلْحَةَ بْنَ الْبَرَاءِ، مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَالَ: «إِنِّي لَا أَرَى طَلْحَةَ إِلَّا قَدْ حَدَثَ فِيهِ الْمَوْتُ فَآذِنُونِي بِهِ وَعَجِّلُوا فَإِنَّهُ، لَا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانَيْ أَهْلِهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2747.
Abu-Dawood-Shamila-3159.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2749.




إسناد ضعيف فيه سعيد الأنصاري وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17073-ஸயீத்  அல்அன்ஸாரி என்பவர் யாரென அறியப்படாதவர்; மேலும் அவரின் மகன் ராவீ-28361-உர்வா பின் ஸயீத் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்; என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/ 392, 1/674),

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-3159 , அல்முஃஜமுல் கபீர்-3554 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8168 , குப்ரா பைஹகீ-6620 , 17834 ,

இதனுடன் தொடர்புள்ள வேறு செய்தி

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-13613 ,

ஜனாஸாவை விரைவாக அடக்கம் செய்வது பற்றி:

ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி வைத்தவர்களாவீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-1315 .

இந்த ஹதீஸின் மூலம் சிலர் ஜனாஸாவை உடனே அடக்கம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் இவர்கள் கூறுகின்ற கருத்தை இது தரவில்லை. உடலைத் தோளில் தூக்கி விட்டால் வேகமாக நடந்து செல்ல வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது. உங்கள் தோள்களிலிருந்து’ என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம். வீட்டில் உடலை வைத்திருப்பதற்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே உடலை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லை.

அதிகமான பேர் தொழுகையில் பங்கேற்பது இறந்தவருக்குப் பயன் தரும் என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன.

அதிகமான மக்கள் சேருவதற்காகத் தாமதம் செய்யலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கிறது.

ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருக்கக் கூடாது. ஒரு வீட்டில் உடல் இருக்கும் வரை சோகம் நீடிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.