தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1315

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

பிரேதத்தை விரைவாக கொண்டு செல்வது.

நீங்கள் பிரேதத்தை அடக்கம் செய்யக் கொண்டு செல்வதாயிருந்தால் அதன் முன்புறம், பின்புறம், இடப்புறம் என எல்லாப் பக்கமும் நடந்து செல்லுங்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

“அத்துடன் பிரேதத்துக்குச் சமீபமாகவும் நடக்க வேண்டும் என்று மற்றவர்கள் (அப்துர்ரஹ்மான் பின் குர்த்-ரலி) கூறுகின்றனர்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.’

இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :23

(புகாரி: 1315)

بَابُ السُّرْعَةِ بِالْجِنَازَةِ

وَقَالَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنْتُمْ مُشَيِّعُونَ وَامْشِ بَيْنَ يَدَيْهَا وَخَلْفَهَا، وَعَنْ يَمِينِهَا، وَعَنْ شِمَالِهَا» وَقَالَ غَيْرُهُ: «قَرِيبًا مِنْهَا»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-1315 , முஸ்லிம்-1721 , 1722 , அபூதாவூத்-3181 , திர்மிதீ-1015 , நஸாயீ-1910 , 1911 , இப்னு மாஜா-1477 , மாலிக்-651 , அஹ்மத்-7267 , 7271 , 7272 , 77727773 , 7774 , 10332 ,

மேலும் பார்க்க : அஹ்மத்-20375 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.