தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-651

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: More Info

651. ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்’ என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரஹ்)

நாஃபிஉ (ரஹ்)

نافع

இறப்பு: ஹிஜ்ரி 117 அல்லது 119 இல் மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: நாஃபிஃ

வம்சம்: மவ்லா இப்னு உமர், அல்குரஷீ, அல்அதவீ, அல்உமரீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 30 இல் மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 117 அல்லது 119 இல் மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

நாஃபிஃ ரஹ் அவர்கள் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் இப்னு உமர் ரலி அவர்களின் அடிமை ஆவார். இவர் மதீனாவில் வசித்தார்.

புகாரி இமாம் அவர்களின் கூற்றுப்படி, மாலிக், நாஃபிஃ, இப்னு உமர் ரலி ஆகியோரின் அறிவிப்பாளர் தொடர் மிகச் சரியான அறிவிப்பாளர் தொடராகும். இவர் மிகப் பலமானவர். ஹிஜ்ரி 117 அல்லது 119 இல் மதீனாவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், ஆயிஷா பின்த் அபீ பக்ர், உம்மு ஸலமா, அபூ ஹுரைரா, அபூ ஸயீத் அல்குத்ரீ, இப்னு அப்பாஸ், அல்காஸிம் பின் முஹம்மத், ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர், உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர், ஸைத் பின் அப்துல்லாஹ் பின் உமர், ஸஃபிய்யா பின்த் அபீ உபைத், ராஃபிஃ பின் கதீஜ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, முஹம்மத் பின் அஜ்லான், உஸாமா பின் ஸைத் அல்லைஸீ, இப்னு ஜுரைஜ், அல்ஸுஹ்ரீ, அய்யூப் அஸ்ஸக்தியானீ, உபைதுல்லாஹ் பின் உமர் அல்உமரீ, மூஸா பின் உக்பா, ஸாலிஹ் பின் கைஸான், அல்ஹகம் பின் உதைபா, ஃபலைஹ் பின் ஸுலைமான்

வேறு பெயர்கள்: நாஃபிஃ மவ்லா இப்னு உமர்


ஆதாரம்: muslimscholars.info (11014) · Should verify


وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ:

أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُمْ إِلَيْهِ، أَوْ شَرٌّ تَضَعُونَهُ عَن رِقَابِكُمْ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-651.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-570.



மேலும் பார்க்க : புகாரி-1315 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.