அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் மரணமாகி, அவருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்தினால் அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது.
அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுபைரா (ரலி)
ஜனாஸா தொழுகைக்கு வந்தவர்கள் குறைவாக இருந்தால் மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்கள், அவர்களை மூன்று வரிசையாக நிற்க செய்வார்கள் என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.
(அபூதாவூத்: 3166)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدٍ الْيَزَنِيِّ، عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ، إِلَّا أَوْجَبَ»،
قَالَ: فَكَانَ مَالِكٌ «إِذَا اسْتَقَلَّ أَهْلَ الْجَنَازَةِ جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ لِلْحَدِيثِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2753.
Abu-Dawood-Shamila-3166.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2755.
إسناده حسن رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் தத்லீஸ் செய்பவர் என்றாலும் முஸ்னத் ரூயானீ என்ற நூலில் எண்-1537 இல் முஹம்மத் பின் இஸ்ஹாக், யஸீத் பின்அபூ ஹபீபிடம் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு உள்ளது. எனவே இது ஹஸன் தரம் என்று கூறிய ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
போன்றோரும் இந்த செய்தியை ஹஸன் என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். (அபூதாவூதின் தக்ரீஜ்-3166) - அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் தனது அஹ்காமுல் ஜனாயிஸ் என்ற நூலில் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறிய பின் இதற்கு கூறும் காரணம் முஹம்மத் பின் இஸ்ஹாக், யஸீத் பின்அபூ ஹபீபிடம் நேரடியாக கேட்டதாக வரவில்லை என்று குறிப்பிடுகிறார். மேலும் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்தியை துணை ஆதாரமாக எடுத்து ஜனாஸா தொழுகையில் வரிசைகளை மூன்றாகவும், அல்லது அதற்கு அதிகமாகவும் அமைப்பது சிறப்பானது என்று கூறியுள்ளார்.
(தத்லீஸ் : தான் நேரடியாக யாரிடம் செவியுற்றாரோ அவரை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவருக்கு மேலே உள்ள அறிவிப்பாளர் கூறியது போல் ஹதீஸை அறிவிப்பது தத்லீஸ் எனப்படும்.)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: ஷைபா-11625 , அஹ்மத்-16724 , இப்னு மாஜா-1490 , அபூதாவூத்-3166 , திர்மிதீ-1028 , அபீயஃலா-6831 , அல்முஃஜமுல் கபீர்-665 , ஹாகிம்-1341 , குப்ரா பைஹகீ-6905 ,
சமீப விமர்சனங்கள்