தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3671

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(அபூதாவூத்: 3671)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلَام:

أَنَّ رَجُلًا، مِنَ الْأَنْصَارِ دَعَاهُ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَسَقَاهُمَا قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ، فَأَمَّهُمْ عَلِيٌّ فِي الْمَغْرِبِ فَقَرَأَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ فَخَلَطَ فِيهَا، فَنَزَلَتْ {لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ} [النساء: 43]


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3186.
Abu-Dawood-Shamila-3671.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3188.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். என்றாலும் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஃபா, ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    ஸுஹைர் பின் முஆவியா, ஸாயிதா பின் குதாமா, ஹம்மாத் பின் ஸைத், அஃமஷ், அய்யூப் அஸ்ஸக்தியானீ போன்ற ஏழு பேரும் இவரிடமிருந்து ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் அவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்பதின் படி மேற்கண்ட செய்தி சரியானதாகும். 

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/103, அல்கவாகிபுன் நய்யிராத்-1/319)

இந்த செய்தி அறிவிப்பாளர்தொடரிலும், கருத்திலும் சிறிது மாற்றமாக வந்துள்ளது.

அதாவிடமிருந்து முஸ்னதாக அறிவிப்பவர்கள்:

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ

2 . அபூஜஃபர் அர்ராஸீ (ஈஸா பின் மாஹான்)

அதாவிடமிருந்து முர்ஸலாக அறிவிப்பவர்கள்:

1 . ஸுஃப்யான் பின் உயைனா

2 . இப்ராஹீம் பின் தஹ்மான்

3 . தாவூத் பின் ஸிப்ரிக்கான்

கருத்தில்…

1 . தொழுகை வைத்தது அலீ (ரலி)

2 . தொழுகை வைத்தது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

3 . வேறு மனிதர்.

4 . கூட்டத்தில் ஒருவர்..

 

1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3671 , திர்மிதீ-3026 , ஹாகிம்-3199 , 7220 , 7221 , …

2 . அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7222 .

…..

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3670 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.