மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:219) என்ற ஸூரத்துல் பகராவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!” (அல்குர்ஆன் 4:43) என்ற ஸூரத்துன் நிஸாவின் வசனம் இறங்கியது. எனவே இகாமத் கூறப்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை அழைப்பாளர், அறிந்துக்கொள்ளுங்கள்! போதையிலுள்ளவர்கள் தொழுகைக்கு நெருங்க வேண்டாம் என்று கூறினார். அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.
பிறகு, “மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91) என்ற (ஸூரத்துல் மாயிதாவின்) வசனம் இறங்கியது. அப்போது தான் உமர் (ரலி) அவர்கள், நாங்கள் விலகிக்கொண்டோம் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுரஹ்பீல் (ரஹ்)
(அபூதாவூத்: 3670)حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الْخُتَّلِيُّ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرٍو، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ:
لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ عُمَرُ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شِفَاءً، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ {يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ} [البقرة: 219] الْآيَةَ، قَالَ: فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، قَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شِفَاءً، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي النِّسَاءِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ يُنَادِي: «أَلَا لَا يَقْرَبَنَّ الصَّلَاةَ سَكْرَانُ»، فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَقَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شِفَاءً، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] قَالَ عُمَرُ: انْتَهَيْنَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3670.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3187.
…அல்இலலுல் வாரிதா-2/184…
இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஇஸ்ஹாக் —> அபூமைஸரா (அம்ர் பின் ஷுரஹ்பீல்) —> உமர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-378 , அபூதாவூத்-3670 , திர்மிதீ-3049 , நஸாயீ-5540 ,
- அபூஇஸ்ஹாக் —> அம்ர் பின் மைமூன் —> உமர் (ரலி)
பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1494 ,
- அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸா —> உமர் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1464 , ஹாகிம்-7224 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3671 .
சமீப விமர்சனங்கள்