தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3698

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மூன்று செயல்களை செய்வதற்கு உங்களுக்கு தடை விதித்திருந்தேன். நான் (இப்போது முதல்) அவைகளை செய்வதற்கு கட்டளையிடுகிறேன். அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில் அதை சந்திப்பதில் படிப்பினை இருக்கிறது.தோல் பையில் தவிர வேறெதிலும் பழச்சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக்கூடிய எதையும் பருகாதீர்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு பிறகு சாப்பிட உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி (நீங்கள் விரும்பும் நாட்களுக்கு) சேமித்து பயணங்களில் உண்ணுங்கள்…

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(அபூதாவூத்: 3698)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُعْرِّفُ بْنُ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ، وَأَنَا آمُرُكُمْ بِهِنَّ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً، وَنَهَيْتُكُمْ عَنِ الْأَشْرِبَةِ أَنْ تَشْرَبُوا إِلَّا فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ أَنْ تَأْكُلُوهَا بَعْدَ ثَلَاثٍ، فَكُلُوا وَاسْتَمْتِعُوا بِهَا فِي أَسْفَارِكُمْ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3698.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3214.




பார்க்க : ஹாகிம்-1392 .

மேலும் பார்க்க : முஸ்லிம்-1778 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.