தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1392

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் அபீ முலைகா கூறுகிறார் :

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்கு சென்று வரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்ய வில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றை சந்தித்து வருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

(ஹாகிம்: 1392)

حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، أَنْبَأَ أَبُو الْمُثَنَّى مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ثنا بِسْطَامُ بْنُ مُسْلِمٍ، عَنْ أَبِي التَّيَّاحِ يَزِيدَ بْنِ حُمَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ،

أَنَّ عَائِشَةَ أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مِنْ أَيْنَ أَقْبَلْتِ؟ قَالَتْ: مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، فَقُلْتُ لَهَا: أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ قَالَتْ: نَعَمْ، «كَانَ قَدْ نَهَى، ثُمَّ أُمِرَ بِزِيَارَتِهَا»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-1327.
Hakim-Shamila-1392.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1324.




  • மண்ணறைகளுக்கு சென்றுவரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளது. அவை அனைத்தும் பலவீனமாக உள்ளது. (பார்க்க: திர்மிதீ-320 )
  • இது தொடர்பாக வரும் மற்ற பல ஹதீஸ்களை பார்க்கும் போது பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருந்தார்கள். பிறகு இதற்கு அனுமதியளித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஜிப்ரீல் “உம் இறைவன் உம்மை “பகீஉ’வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்’ என்று (என்னிடம்) கூறினார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
முஸ்லிம்-1774 )

மேலும் பார்க்க : முஸ்லிம்-1778 , 3995 , அபூதாவூத்-3235 , 3698 .

…இப்னு மாஜா-1570 ,

  • மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
  • பெண்கள் மண்ணறைகளுக்கு செல்லக்கூடாது என்றால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக்கொடுத்திருக்கமாட்டார்கள்.
  • இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்கு சென்று மண்ணறைகளை பார்த்து மறுமை சிந்தனையை வரவழைத்துக்கொள்ளலாம்.
  • ஆனால் ஆண்களானாலும் பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.