தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-320

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மண்ணறைகளை சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் அவற்றின் மீது பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதி: 320)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ»

وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَائِشَةَ
«حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-294.
Tirmidhi-Shamila-320.
Tirmidhi-Alamiah-294.
Tirmidhi-JawamiulKalim-294.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8888-பாதாம்-பாதான்-அபூஸாலிஹ் என்பவர் பற்றி, இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    போன்றோர் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளனர். மற்ற பெரும்பாலான அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். ஆனால் இவர், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்றும், இவர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/211)
  • புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (நூல்: மீஸானுல் இஃதிதால்-1121)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-2030 , 2603 , 2984 , 3118 , இப்னு மாஜா-1575 , அபூதாவூத்-3236 , திர்மிதீ-320 , நஸாயீ-2043 , …

கூடுதல் தகவல் பார்க்க : ஹாகிம்-1392 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.