பாடம்:
சட்டைப் பித்தான்களை மாட்டாமலிருப்பது.
நான், எனது முஸைனா கூட்டத்தாருடன் சேர்ந்து வந்து (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி அளித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பித்தான்கள் திறந்திருந்தன.
நான் பைஅத் செய்யும் போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பையில் கையை விட்டு நபித்துவ முத்திரையை தடவிப் பார்த்தேன்.
அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)
உர்வா பின் அப்துல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்:
முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்களும், அவரின் மகனும் குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் சட்டைப் பித்தான்களை திறந்தே விட்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். எப்போதும், அவர்கள் சட்டைப் பித்தான்களை மாட்டுவதில்லை.
(அபூதாவூத்: 4082)بَابٌ فِي حَلِّ الْأَزْرَارِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَا: حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عُرْوَةُ بْنُ عَبْدِ اللَّهِ – قَالَ ابْنُ نُفَيْلٍ: ابْنُ قُشَيْرٍ أَبُو مَهَلٍ الْجُعْفِيُّ – حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، حَدَّثَنِي أَبِي، قَالَ:
«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ، فَبَايَعْنَاهُ، وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ»، قَالَ: «فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ، فَمَسِسْتُ الْخَاتَمَ»
قَالَ عُرْوَةُ: «فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ، إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ، وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4082.
Abu-Dawood-Alamiah-3560.
Abu-Dawood-JawamiulKalim-3562.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . நுஃபைலீ-அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ பின் நுஃபைல்;
3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்.
4 . ஸுஹைர் பின் முஆவியா
5 . உர்வா பின் அப்துல்லாஹ்
6 . முஆவியா பின் குர்ரா
7 . குர்ரா பின் இயாஸ் (ரலி)
4 . இந்தக் கருத்தில் குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: முஸ்லிம்-4682.
சமீப விமர்சனங்கள்