தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4160

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் எகிப்தில் இருக்கும் போது, நபித்தோழர்களில் ஒருவர் அவரை சந்திக்க சென்றார். அவர் அவர்களிடம் சென்று, “( ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களே!) உங்களை (வெறுமனே) சந்தித்துவிட்டு செல்ல நான் வரவில்லை. மாறாக நீங்களும், நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹதீஸை கேட்டுள்ளோம். அதைப்பற்றிய (கூடுதல்) ஞானம் தங்களுக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

அதற்கு ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், “அது என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “இன்னின்ன செய்திகள்” என்று பதில் கூறினார். பின்பு அவர், ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் நீங்கள் இந்த நிலப்பரப்பின் தலைவராக இருந்தும் சீவாத தலையுடைவர்களாக உங்களை காண்கிறேனே! (அது ஏன்?) என்று கேட்டார். அதற்கு ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், “நாங்கள் (வரம்பு மீறி தலை வாரி) அலங்காரம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று கூறினார். அவர், உங்களை செறுப்பணியாதவராக காண்கிறேனே (அது ஏன்?) என்று கேட்டார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் சில நேரம் செறுப்பணியாமல் நடக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 4160)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ،

أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ، فَقَدِمَ عَلَيْهِ، فَقَالَ: أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا، وَلَكِنِّي سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ، قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: فَمَا لِي أَرَاكَ شَعِثًا وَأَنْتَ أَمِيرُ الْأَرْضِ؟ قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْ كَثِيرٍ مِنَ الإِرْفَاهِ»، قَالَ: فَمَا لِي لَا أَرَى عَلَيْكَ حِذَاءً؟ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نَحْتَفِيَ أَحْيَانًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4160.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23969 , அபூதாவூத்-4160 , நஸாயீ-5239 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.