தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4336

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நன்மையை ஏவி தீமையை தடுத்தல்.

”உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ரவேலர்களில் ஏற்பட்ட முதல் தவறு என்னவெனில், ஒரு மனிதர் தவறு செய்தால் மற்றொரு மனிதர், இன்னவரே! நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். நீ செய்யும் பாவத்தைவிட்டு விடு இது உனக்கு ஆகுமானதல்ல என்று கூறி அவரைத் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதனால் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு அல்லாஹ் கலந்துவிட்டான் என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறுசெய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. அவர்களில் அதிகமானோர் (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் தயாரித்தது கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்மதையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்களைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 5:78-81) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்:

எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் நிலைத்திருக்க செய்யுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்  (ரலி)

(அபூதாவூத்: 4336)

بَابُ الْأَمْرِ وَالنَّهْيِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ رَاشِدٍ، عَنْ عَلِيِّ بْنِ بَذِيمَةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ أَوَّلَ مَا دَخَلَ النَّقْصُ عَلَى بَنِي إِسْرَائِيلَ، كَانَ الرَّجُلُ يَلْقَى الرَّجُلَ، فَيَقُولُ: يَا هَذَا، اتَّقِ اللَّهَ وَدَعْ مَا تَصْنَعُ، فَإِنَّهُ لَا يَحِلُّ لَكَ، ثُمَّ يَلْقَاهُ مِنَ الْغَدِ، فَلَا يَمْنَعُهُ ذَلِكَ أَنْ يَكُونَ أَكِيلَهُ وَشَرِيبَهُ وَقَعِيدَهُ، فَلَمَّا فَعَلُوا ذَلِكَ ضَرَبَ اللَّهُ قُلُوبَ بَعْضِهِمْ بِبَعْضٍ “، ثُمَّ قَالَ: {لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُدَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ} إِلَى قَوْلِهِ {فَاسِقُونَ} [المائدة: 81]، ثُمَّ قَالَ: «كَلَّا وَاللَّهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ، وَلَتَأْخُذُنَّ عَلَى يَدَيِ الظَّالِمِ، وَلَتَأْطُرُنَّهُ عَلَى الْحَقِّ أَطْرًا، وَلَتَقْصُرُنَّهُ عَلَى الْحَقِّ قَصْرًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4336.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3776.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20530-அபூஉபைதா-ஆமிர் பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் அவர்கள் தன் தந்தை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதே சரியானதென (முன் சென்ற ஹதீஸ்கலை அறிஞர்களின் விமர்சன அடிப்படையில்) இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/1174)
  • அபூஉபைதா தனது தந்தையிடம் ஹதீஸை கேட்டுள்ளார் என்று தோற்றமளிக்கும் சில செய்திகள் இருந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன என்பதால் அவை ஆதாரத்திற்கேற்றதல்ல…

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-3713 , இப்னு மாஜா-4006 , அபூதாவூத்-4336 , திர்மிதீ-3047 , 3048 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.