ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள மனிதர்கள் அதைத் தடுக்காவிட்டால், அவர்கள் இறப்பதற்குள் அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(அபூதாவூத்: 4339)حَدَّثَنَا مُسَّدَدٌ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، أَظُنُّهُ عَنِ ابْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ، فَلَا يُغَيِّرُوا، إِلَّا أَصَابَهُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ قَبْلِ أَنْ يَمُوتُوا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4339.
Abu-Dawood-Alamiah-3776.
Abu-Dawood-JawamiulKalim-3778.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஸத்தத் பின் முஸர்ஹித்
3 . அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம்
4 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ
5 . உபைதுல்லாஹ் பின் ஜரீர்
6 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், யூஸுஃப் பின் அபூஇஸ்ஹாக், இஸ்ராயீல் பின் யூனுஸ், அபுல்அஹ்வஸ், ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
மஃமர், அப்துல்ஹமீத் பின் ஜஃபர், அஃமஷ், ஷரீக் பின் அப்துல்லாஹ் ஆகிய 9 பேர் அறிவித்துள்ளனர்…
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (13/ 451)
3342- وسئل عن حديث عبد الله بن جرير، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم، قال: ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي، يقدرون على أن يغيروا، فلم يغيروا، إلا أصابهم الله بعقاب.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فرواه أبو الأحوص، وَسَلَمَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عبد الله بن جرير، عن أبيه.
وكذلك روي عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الله بن جرير، عن أبيه.
ورواه (شعبة) ، ويونس بن أبي إسحاق، وابنه إسرائيل، وعبد الكبير بن دينار، ومعمر، عن أبي إسحاق، عن عبيد الله بن جرير، عن أبيه.
وقال أبو سنان: عن أبي إسحاق، عن ابن جرير، عن أبيه، ولم يسمه.
وقال عبد الحميد بن أبي جعفر: عن أبي إسحاق، عن عبيد الله، أو عبيد الله بن جرير، عن أبيه.
وخالفهم شريك، رواه عن أبي إسحاق، عن المنذر بن جرير، عن أبيه، ولم يتابع عليه.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை கீழ்கண்டவாறு தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்:
1 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம், ஸலமா பின் ஸாலிஹ், அஃமஷ் ஆகிய 3 பேர் அபூஇஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், இஸ்ராயீல் பின் யூனுஸ், அப்துல்கபீர் பின் தீனார், மஃமர் ஆகியோர் அபூஇஸ்ஹாக் —> உபைதுல்லாஹ் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
3 . அபூஸினான் என்பவர் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை இப்னு ஜரீர் என்று மட்டுமே கூறியுள்ளார்.
4 . அப்துல்ஹமீத் பின் ஜஃபர் அவர்கள் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை அப்துல்லாஹ் அல்லது உபைதுல்லாஹ் என்று அறிவித்துள்ளார்.
5 . அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷரீக் பின் அப்துல்லாஹ் அவர்கள் அபூஇஸ்ஹாக் —> முன்திர் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
ஷரீக் பின் அப்துல்லாஹ் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3342)
அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் போன்றோரின் அறிவிப்பே சரியானதாகும்.
(நூல்: அல்கவாகிபுன் நய்யிராத்-1/341)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27316-உபைதுல்லாஹ் பின் ஜரீர் அவர்களிடமிருந்து பலமானவர்களில் பலர் அறிவித்துள்ளனர். இவரின் தரத்தைப் பற்றி புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் குறிப்பிடவில்லை. - இவர் தனது தந்தை ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார். இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, அப்துல்மலிக் பின் உமைர், யஸீத் பின் அபூஸியாத் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்ற தகவலை மட்டுமே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். - இந்த தகவலையே மிஸ்ஸீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
ஆகியோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/310, தஹ்தீபுல் கமால்-19/16, அல்இக்மால்-9/6, அல்காஷிஃப்-3/347, தஹ்தீபுத் தஹ்தீப்-3/6, தக்ரீபுத் தஹ்தீப்-1/636)
இந்த நிலையில் உள்ளவர்கள் குறைந்த பட்சம் ஹஸன் தரத்தில் உள்ளவர்கள் ஆவார்கள்.
மேலும் இதில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.
- இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
- மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 121/130
அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
இறப்பு ஹிஜ்ரி 310
வயது: 86
அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 338
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
போன்ற இன்னும் சிலர் இவரிடம் ஆரம்ப காலத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் இதில் முதல் விமர்சனம் இல்லை.
இதில் இடம்பெறும் உபைதுல்லாஹ் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூஃபாவாசி ஆவார்; அபூஇஸ்ஹாக் அவர்களும் கூஃபாவாசி என்பதுடன் இவர் ஹிஜ்ரீ 30 இல் பிறந்தவர் என்பதால் இந்த செய்தியை அவர்களிடம் நேரடியாக கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இதில் தத்லீஸ் என்ற குறையும் இல்லை.
இந்தச் செய்தியின் கருத்து வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது என்பதால் “ஹஸன் ஸஹீஹ்” ஆகும்.
2 . இந்தக் கருத்தில் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஇஸ்ஹாக் —> உபைதுல்லாஹ் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஸுனன் ஸயீத்-, அஹ்மத்-, இப்னு மாஜா-4009 , முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
- அபூஇஸ்ஹாக் —> இப்னு ஜரீர், முன்திர் பின் ஜரீர் —> ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, அபூதாவூத்-4339 , அல்முஃஜமுல் கபீர்-,
…
மேலும் பார்க்க: இப்னு மாஜா-4005 .
சமீப விமர்சனங்கள்