தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-455

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 156

மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது. திர்மிதீயில் முர்ஸலாக இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 455)

156- بَابُ اتِّخَاذِ الْمَسَاجِدِ فِي الدُّورِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»


AbuDawood-Tamil-455.
AbuDawood-Shamila-455.
AbuDawood-JawamiulKalim-383.




இதில் வரும் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் என்றாலும், இது அறிவிப்பாளர்தொடர் ஷாத் என்ற வகையைச் சேரந்ததாகும். எனவே இது பலவீனமானது.

  • இந்தச் செய்தி, ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாகவும் வந்துள்ளது.
  • உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாகவும் (முர்ஸலாக) வந்துள்ளது.
  • இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    , அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஷாகிர், அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.

காரணம் ஹிஷாமிடமிருந்து பலமான அறிவிப்பாளர் ஸாயிதா பின் குதாமா, அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோரும், இன்னும் சிலரும் உர்வா (ரஹ்) —- ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) என்று அறிவித்துள்ளனர். எனவே இது சரியான செய்தி என்று கூறியுள்ளனர்.

  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    திர்மிதீ, உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    பஸ்ஸார் போன்றோர் உர்வா (ரஹ்) விற்கு இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) விடப்பட்டு முர்ஸலாக வரும் செய்தியே சரியானது என்று கூறியுள்ளனர்.

ஹிஷாமிடமிருந்து அறிவிப்பவர்களில் வகீஉ, ஸுஃப்யான், அப்தா போன்றோர் முர்ஸலாக அறிவிக்கின்றனர். இவர்கள் பலமானவர்கள். மேலும் உர்வா (ரஹ்) —- ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) என்று வரும் அறிவிப்பாளர்தொடர்களில் ஸாயிதா பின் குதாமா வரும் அறிவிப்பைத் தவிர மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் குறையுள்ளது என்பதாலும், இதில் பலமானவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் இந்தக் கருத்தே சரியானது என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். (நூல் : அல்ஜாமிஉ ஃபில் இலல் வல்ஃபவாஇத் 3/283)

மேலும் பார்க்க : திர்மிதீ-594 .

  • பள்ளிவாசலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், அசுத்தப்படுத்தக்கூடாது என்பதற்கு வேறு சரியான ஆதாரங்கள் உள்ளன.
  1. இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)
  2. பார்க்க : புகாரி-417 , முஸ்லிம்-480 ,  5736 ,

2 comments on Abu-Dawood-455

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தி முர்ஸலாக வந்திருப்பதே சரியானது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமானது. பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது என்ற கருத்து சரியானது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.