அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(திர்மிதி: 594)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ المُؤَدِّبُ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا عَامِرُ بْنُ صَالِحٍ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ، وَتُطَيَّبَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-594.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-542.
إسناد شديد الضعف فيه عامر بن صالح الأسدي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆமிர் பின் ஸாலிஹ் மிக பலவீனமானவர்.
இந்தச் செய்தி ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாகவும், உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாகவும் (முர்ஸலாக) வந்துள்ளது.
சில அறிஞர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள் வரும் செய்தியை ஏற்று இது சரியான ஹதீஸ் என கூறுகின்றனர். சில அறிஞர்கள் அறிவிப்பாளர்தொடரில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள் கூறப்படாமல் வரும் செய்தியே சரியானவை. எனவே இது முர்ஸல் என்று கூறுகின்றனர். பார்க்க : அபூதாவூத்-455 .
- இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடரில் உர்வா (ரஹ்) விற்கு அடுத்து ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-594 , அபூதாவூத்-455 , அஹ்மத்-26386 , இப்னு மாஜா-758 , 759 , முஸ்னத் அபீயஃலா-4698 , இப்னு குஸைமா-1294 , இப்னு ஹிப்பான்-1634 ,
2 . இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடரில் உர்வா (ரஹ்) விற்கு அடுத்து ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) விடுப்பட்டு வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-595 , 596 , இப்னு அபீஷைபா-7444 ,
மேலும் பார்க்க : அபூதாவூத்-456 .
- பள்ளிவாசலை தூய்மையாகவும் நறுமணமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
பார்க்க : புகாரி-417 , முஸ்லிம்-480 , 5736 ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
இந்த ஹதீஸ் பற்றிய என்னுடைய கேள்வியை நான் இங்கே பதிவு செய்கிறேன் விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த ஹதீஸ் பலகீனமானது என்றால் அதை நாம் செய்யக்கூடாது. ஆனால் நாம் அனைவரும் இதை செய்து கொண்டிருக்கிறோமே இதை எவ்வாறு விளக்குவது.
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு… இந்த ஹதீஸ் பலவீனம் என்றால் இதை ஆதாரம் காட்டக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் . அதை விடுத்து பள்ளிவாசலை ஆள்அரவமற்ற பகுதிகளில் கட்ட வேண்டும் , அசுத்தமாகவும் , துர்நாற்றம் உடையதாகவும் வைக்க வேண்டும் என்று எவரும் விளங்க மாட்டார்கள்.
Pallivasalai suttam வைக்க வேண்டும் மற்றும் நறுமணம் upyogஅம் seiyalam என்ற தகவல் sahih முஸ்லிம் இல் உள்ளது. Sahih முஸ்லிம் 5736 இல் உள்ளது.