தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-456

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸுலைமான் பின் ஸமுரா அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள், எனக்கு எழுதிய கடிதத்தில் “இறைவாழ்த்துக்கும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிய பின்பு (எழுதுவது என்னவெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

 

(அபூதாவூத்: 456)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ سُفْيَانَ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ حَسَّانَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سَعْدِ بْنِ سَمُرَةَ، حَدَّثَنِي خُبَيْبُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ سُلَيْمَانَ بْنِ سَمُرَةَ، عَنْ أَبِيهِ سَمُرَةَ،

أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِهِ: أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَأْمُرُنَا بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-456.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-384.




إسناد ضعيف فيه جعفر بن سعد الفزاري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஜஃபர் பின் ஸஃத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
  1. இந்தக் கருத்தில் ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-456 , அஹ்மத்-20184 , அல்முஃஜமுல் கபீர்-7026 , 7027 , பஸ்ஸார்-4622 ,

2 . உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-594 .

3 . நபித்தோழர் ஒருவர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-23146 ,

4 . ஃபுராஃபிஸா (ரலி) வழியாக வரும் செய்தி:

ஷரஹ் முஷ்கிலுல் ஆஸார்-2806 .

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இது சரியான செய்தி அல்ல என்று கூறியுள்ளார்.

ولا يصح
العلل الواردة في الأحاديث النبوية: (14 / 155)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.