தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-462

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160

ஆண்களுடன் பெண்கள் பள்ளிகளில் ஒன்று சேராதிருத்தல்.

இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.

அபூதாவூத் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வாரிஸ் என்பவரைத் தவிர மற்றவர்கள் உமர் (ரலி) கூறினார் என்று அறிவிக்கின்றனர். இதுதான் மிகச் சரியானதாகும்.

(அபூதாவூத்: 462)

160- بَابٌ فِي اعْتِزَالِ النِّسَاءِ فِي الْمَسَاجِدِ عَنِ الرِّجَالِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»، قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ، حَتَّى مَاتَ،

وَقَالَ غَيْرُ عَبْدِ الْوَارِثِ: قَالَ عُمَرُ: وَهُوَ أَصَحُّ


Abu-Dawood-Tamil-462.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-462.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-390.




  • மேற்கண்ட செய்தி (நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக) நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும், (நாஃபிஉ —> உமர் (ரலி) அவர்களின் வழியாக) உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது.

1 . (புகைர் —> நாஃபிஉ —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) புகைர், நாஃபிஉ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும், அய்யூப் அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் இப்ராஹீம் அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பிலும் உமர் (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது. (பார்க்க: அபூதாவூத்-464 , 571 )

2 . (அப்துல் வாரிஸ்—> அய்யூப் —> நாஃபிஉ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல் வாரிஸ் அவர்களின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளது.

அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், இந்த செய்தி உமர் (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது தான் உண்மை என்று குறிப்பிடுகிறார். இவ்வாறே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்களும் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா 13/30) 

  • என்றாலும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ள செய்திக்கே முக்கியத்துவம் தந்து அதை நபி (ஸல்) அவர்களின் கூற்று எனக் கூறுகின்றனர்.
  • காரணம் நாஃபிஉ அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் அது முன்கதியான செய்தியாகிறது என்பதாலும், அப்துல் வாரிஸ் (ஸிகதுன், ஸப்துன்) மிக பலமானவர் என்பதால் பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதாலும் இது உமர் (ரலி) அவர்களின் சொல் என்பதை விட நபி (ஸல்) அவர்களின் சொல் என்பதே சரியானது எனக் கூறுகின்றனர். (நூல்: ஸஹீஹ், ளஈஃப் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அல்உம் பிரதி)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1938 , அபூதாவூத்-462 , 463 , 464 , 571 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1018 ,

6 comments on Abu-Dawood-462

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இது நபி(ஸல்) அவர்களின் கூற்றா?

    AbuDawood-571ஹதீஸின் படி மேலுள்ள அந்த செய்தியை (ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றில்லாமல்) உமர் (ரலி) சொன்னார்கள் என நாபிஃ வழியாக அய்யூப் மூலம் இதை இஸ்மாயீல் பின் இப்ராஹீம் அறிவிக்கின்றார். இது மிக சரியானதாகும்.

    எது சரி? சற்று விளக்கம் தேவை

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. கூடுதல் விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

  2. அஸ்ஸலாமு அலைகும்.

    நாஃபிவு இப்னு உமரிடம் செவியுறவில்லை என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அல்பானி கூறுகிறார்? அது சரி என்றால் இப்னு உமரிடமிருந்தி நாஃபிவு பல ஹதீஸ்கள் அறிவித்துள்ளார். அது அனைத்துமே பலவீனமடையும். மேலும் அல்பானி சொல்லும் அடிப்படையில் பார்த்தால்கூட நபியவர்களின் கூற்றாக அப்துல் வாரிஸ் அறிவிக்கும் ஹதீஸும் நாஃபிவு வழியாகவே வருகிறது. எனவே அதுவும் பலவீனமடையும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சகோ, நாஃபிஉ அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் செவியேற்றுள்ளார். உமர் (ரலி) அவர்களிடம் தான் செவியேற்கவில்லை. அதைப்பற்றியே இதில் விமர்சனம் உள்ளது. இந்த செய்தியின் இறுதி அரபு வாசகத்தைக் கவனிக்கவும்.

      1. நாஃபிஉ அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம் செவியேற்றுள்ளார். உமர் (ரலி) அவர்களிடம் தான் செவியேற்கவில்லை

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.