தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4972

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒருவர், மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தையை கூறுவது பற்றி வந்துள்ளவை.

அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற வார்த்தை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை நீங்கள் செவியேற்றதுண்டா? என அபூமஸ்வூத் அவர்கள், அபூஅப்தில்லாஹ் அவர்களிடம்; அல்லது அபூஅப்தில்லாஹ் அவர்கள், அபூமஸ்வூத் அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கவர்கள், ஸஅமூ – மக்கள் பேசிக் கொள்கின்றனர் என்ற உறுதியற்ற வார்த்தை(யை ஒருவர் கூறுவது அவரது) தீய சவாரியாகும் (நடைமுறையாகும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று பதில் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இதில், அபூஅப்தில்லாஹ் என்ற குறிப்புப் பெயர் கொண்டவர் ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் ஆவார்கள்.

(அபூதாவூத்: 4972)

بَابٌ فِي قَوْلِ الرَّجُلِ: زَعَمُوا

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ:

قَالَ أَبُو مَسْعُودٍ لِأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ لِأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: فِي «زَعَمُوا؟» قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا»

قَالَ أَبُو دَاوُدَ: ” أَبُو عَبْدِ اللَّهِ هَذَا: حُذَيْفَةُ “


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4321.
Abu-Dawood-Shamila-4972.
Abu-Dawood-Alamiah-4321.
Abu-Dawood-JawamiulKalim-4323.




1 . இந்தக் கருத்தில் அபூமஸ்ஊத் (ரலி) அல்லது ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூகிலாபா —> அபூமஸ்ஊத் (ரலி) அல்லது ஹுதைஃபா (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, அபூதாவூத்-4972 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-,

  • அவ்ஸாயீ —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூகிலாபா —>அபூமஸ்ஊத் (ரலி)

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-, அஹ்மத்-, குப்ரா பைஹகீ-,

  • யஹ்யா —> அபூகிலாபா —>ஹுதைஃபா (ரலி)

பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.