தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5090

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது தந்தை அபூபக்ரா (ரலி) அவர்களிடம், “எனது தந்தையே, நீங்கள் தினமும் காலையிலும் மாலையிலும்,

“அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ஸம்ஈ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பஸரீ, லாஇலாஹ இல்லா அன்த”

என்ற துஆவையும்,

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி, வல்ஃபக்ரி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ரி, லா இலாஹ இல்லா அன்த”

(பொருள்: அல்லாஹ்வே! என் உடலிலும், செவிப்புலனிலும், பார்வையிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவாயாக!. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

அல்லாஹ்வே! இறைநிராகரிப்பையும், வறுமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.)

என்ற துஆவையும் வழமையாக மூன்று தடவை ஓதி வருவதைக் நான் செவியேற்கிறேனே!. (இதை ஏன் ஓதுகிறீர்கள்) என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஓதியதை நான் செவியேற்றுள்ளேன். எனவே அவர்களின் நடைமுறையை பின்பற்ற நான் ஆசைப்படுகிறேன் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏதேனும் துன்பத்தில் இருப்பவரின் பிரார்த்தனை, “அல்லாஹும்ம ரஹ்மதக அர்ஜூ, ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்ன். வ அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹூ, லாஇலாஹ இல்லா அன்த” என்பதாகும்.

(பொருள்: அல்லாஹ்வே! உனது அருளையே நான் ஆதரவுவைக்கிறேன். கண்சிமிட்டும் நேரம்கூட என்னை, என்னிடம் சாட்டிவிடாதே! எனது அனைத்து நிலைகளையும் சீர்படுத்துவாயாக! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது, அப்பாஸ் பின் அப்துல்அளீம் அவர்களின் அறிவிப்பாகும். முஹம்மத் பின் முஸன்னா அவர்கள் முதல் பகுதியை மட்டுமே அறிவித்தார். இருவரில் ஒருவரையொருவர், ஒருவர் சொல்வதைவிட மற்றவர் கூடுதலாக அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 5090)

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ،

أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، تُعِيدُهَا ثَلَاثًا، حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي»، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ،
قَالَ عَبَّاسٌ فِيهِ: وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، فَتَدْعُو بِهِنَّ» فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ
قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعَوَاتُ الْمَكْرُوبِ «اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ،

وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5090.
Abu-Dawood-Alamiah-4426.
Abu-Dawood-JawamiulKalim-4428.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அப்பாஸ் பின் அப்துல்அளீம், 3 . முஹம்மத் பின் முஸன்னா.

4 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்

5 . அப்துல்ஜலீல் பின் அதிய்யா

6 . ஜஃபர் பின் மைமூன்

7 . அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா

8 . அபூபக்ரா (ரலி)


மேலும் பார்க்க: அஹ்மத்-20430.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.