தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20430

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது தந்தை அபூபக்ரா (ரலி) அவர்களிடம், எனது தந்தையே! நீங்கள் தினமும் காலையிலும் மாலையிலும்,

“அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ஸம்ஈ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பஸரீ, லாஇலாஹ இல்லா அன்த”

என்ற துஆவையும்,

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி, வல்ஃபக்ரி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ரி, லா இலாஹ இல்லா அன்த”

(பொருள்: அல்லாஹ்வே! என் உடலிலும், செவிப்புலனிலும், பார்வையிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவாயாக!. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

அல்லாஹ்வே! இறைநிராகரிப்பையும், வறுமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.)

என்ற துஆவையும் வழமையாக மூன்று தடவை ஓதி வருவதைக் நான் செவியேற்கிறேனே!. (இதை ஏன் ஓதுகிறீர்கள்) என்று கூறினேன்.

அதற்கவர்கள், “ஆம் எனது அருமை மகனே! (இதை நான் வழமையாக ஓதி வருகிறேன். ஏனெனில்) இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஓதியதை நான் செவியேற்றுள்ளேன். எனவே அவர்களின் நடைமுறையை பின்பற்ற நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏதேனும் துன்பத்தில் இருப்பவரின் பிரார்த்தனை, “அல்லாஹும்ம ரஹ்மதக அர்ஜூ, ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்ன். வ அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹூ, லாஇலாஹ இல்லா அன்த” என்பதாகும்.

(பொருள்: அல்லாஹ்வே! உனது அருளையே நான் ஆதரவுவைக்கிறேன். கண்சிமிட்டும் நேரம்கூட என்னை, என்னிடம் சாட்டிவிடாதே! எனது அனைத்து நிலைகளையும் சீர்படுத்துவாயாக! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை)

(முஸ்னது அஹ்மத்: 20430)

حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا عَبْدُ الْجَلِيلِ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكَرَةَ،

أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَهْ، إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ: «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي» ، وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، تُعِيدُهَا حِينَ تُصْبِحُ ثَلَاثًا، وَثَلَاثًا حِينَ تُمْسِي» ، قَالَ: نَعَمْ يَا بُنَيَّ، إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ، فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

قَالَ: وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20430.
Musnad-Ahmad-Alamiah-19534.
Musnad-Ahmad-JawamiulKalim-19948.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்

3 . அப்துல்ஜலீல் பின் அதிய்யா

4 . ஜஃபர் பின் மைமூன்

5 . அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா

6 . அபூபக்ரா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10632-ஜஃபர் பின் மைமூன் என்பவர் பற்றி, இவர் ஒரு பொருட்டே அல்ல என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    ஆகியோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர். இவரின் செய்தியில் முன்கரான எதையும் நான் காணவில்லை என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவரின் செய்தியை மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோர் மட்டுமே இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/313, தக்ரீபுத் தஹ்தீப்-1/201)


முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அபூபக்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் மைமூன் என்பவர் இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியை மட்டுமே அறிவித்துள்ளார். உஸ்மான் பின் மைமூன் அறிவிக்கும் ஒரு செய்தியை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார். இவரை அதிகமானோர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க: நஸாயீ-1347)

ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியின் முதல் பகுதி பலவீனமானதாகும். சிலர் இவர் பற்றி அறிஞர்களின் இருவகையான கருத்து இருப்பதால் இவரை ஹஸன் தரம் என்று முடிவு செய்வதால் இவரின் சில செய்திகளை ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.

இது போன்ற விமர்சனம் உள்ளவர்கள் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமாகும். இவர்கள் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அதை அவர் சரியாக மனனமிட்டுள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம்.


1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்ஜலீல் பின் அதிய்யா —> ஜஃபர் பின் மைமூன் —> அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா —> அபூபக்ரா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-909, 910, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29184, 29155, அஹ்மத்-20430, அல்அதபுல் முஃப்ரத்-701, அபூதாவூத்-5090, குப்ரா நஸாயீ-10332, 10412, இப்னு ஹிப்பான்-970,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-650, நஸாயீ-1347,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.