தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1347

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தொழுகைக்குப் பின் (அல்லாஹ்விடம்) பாதுகாவல் தேடுதல்.

 முஸ்லிம் பின் அபூபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை அபூபக்ரா (ரலி) அவர்கள் தொழுகைக்குப் பின்,

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி, வல்ஃபக்ரி, வ அதாபில் கப்ரி”

(பொருள்: அல்லாஹ்வே! இறைநிராகரிப்பு, வறுமை, கப்ரின் வேதனை ஆகியவற்றை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)

என்ற துஆவை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். (நானும் அதை மனனமிட்டு ஓத ஆரம்பித்தேன்.) நான் ஓதுவதைக் கேட்ட எனது தந்தை, மகனே! இதை நீ யாரிடமிருந்து கற்றுக் கொண்டாய்! என்று கேட்டார்கள். அதற்கு நான், “உங்களிடமிருந்து தான்” என்று கூறினேன். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் இதை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.

(நஸாயி: 1347)

بَابُ التَّعَوُّذِ فِي دُبُرِ الصَّلَاةِ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ الشَّحَّامِ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ، قَالَ:

كَانَ أَبِي يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَكُنْتُ أَقُولُهُنَّ، فَقَالَ أَبِي: أَيْ بُنَيَّ، عَمَّنْ أَخَذْتَ هَذَا؟ قُلْتُ عَنْكَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ فِي دُبُرِ الصَّلَاةِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1347.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ்

3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

4 . உஸ்மான் பின் மைமூன் அஷ்ஷஹ்ஹாம்

5 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் அபூபக்ரா

6 . அபூபக்ரா (ரலி)


 


1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உஸ்மான் பின் மைமூன் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் அபூபக்ரா —> அபூபக்ரா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12030, 29138, அஹ்மத்-20381, 20409,  20447, திர்மிதீ-3503, முஸ்னத் பஸ்ஸார்-3675, குப்ரா நஸாயீ-1271, நஸாயீ-1347, இப்னு குஸைமா-747, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-1028, ஹாகிம்-, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20430,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.