பாடம்:
ஒருவர் இன்னொருவருக்காக எழுந்து நிற்பது.
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), இப்னு ஆமிர் ஆகியோர் இருந்த இடத்திற்கு முஆவியா (ரலி) அவர்கள் வந்தார். அவரைக் கண்ட இப்னு ஆமிர் அவர்கள் எழுந்து நின்றார். அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அமர்ந்தே இருந்தார். உடனே முஆவியா (ரலி) அவர்கள், இப்னு ஆமிர் அவர்களிடம், அமருங்கள்!. “தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
(அபூதாவூத்: 5229)بَابٌ فِي قِيَامِ الرَّجُلِ لِلرَّجُلِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ
خَرَجَ مُعَاوِيَةُ عَلَى ابْنِ الزُّبَيْرِ، وَابْنِ عَامِرٍ فَقَامَ ابْنُ عَامِرٍ وَجَلَسَ ابْنُ الزُّبَيْرِ فَقَالَ مُعَاوِيَةُ لِابْنِ عَامِرٍ: اجْلِسْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4552.
Abu-Dawood-Shamila-5229.
Abu-Dawood-Alamiah-4552.
Abu-Dawood-JawamiulKalim-4554.
- இந்த நிகழ்வு பற்றி வரும் செய்திகளில் மேற்கண்ட செய்தியே சரியானதாகும். ஹபீப் பின் ஷஹீத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஹம்மாத் பின் ஸலமா போன்ற பலர் இவ்வாறே அறிவித்துள்ளனர். - ஹபீப் பின் ஷஹீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி), இப்னு ஆமிர் ஆகிய இருவருமே எழுந்து நின்றார்கள் என்று அறிவித்துள்ளார். பலருக்கு இது மாற்றமாக இருப்பதால் இது ஷாத் ஆகும். - இவ்வாறே இப்னு ஆமிர் என்பவருக்கு பதிலாக இப்னு ஸஃப்வான் என்று கூறப்படும் அறிவிப்பாளர்தொடர்களும் ஷாத் ஆகும்.
(ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இப்னு ஆமிர், இப்னு ஸஃப்வான் இருவரும் அங்கிருந்துள்ளார்கள். இருவரும், வேறு சிலரும் எழுந்துள்ளனர். மர்வான் பின் முஆவியாவின் அறிவிப்பில் முஆவியா (ரலி) அவர்கள் வரும் போது (சிலர்) எழுந்தனர் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளது என்பதிலிருந்து இதைத் தெரிந்துக்கொள்ளலாம் என்றக் கருத்தில் கூறியுள்ளார்.
என்றாலும் அதிகமானவர்கள் அறிவிக்கும் கருத்தே சரியாகும்.)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1053 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25582 , அஹ்மத்-16830 , 16845 , 16918 , அல்அதபுல் முஃப்ரத்-977 , அபூதாவூத்-5229 , திர்மிதீ-2755 , அல்முஃஜமுல் கபீர்-724 , 819 , 820 , 821 , 822 , 852 ,
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2754 ,
சமீப விமர்சனங்கள்