அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா பாம்புகளையும் கொல்லுங்கள். அவை பழிவாங்கிவிடும் என பயந்து (அவைகளை கொல்லாதவர்) என்னை சார்ந்தவர் அல்ல.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(அபூதாவூத்: 5249)
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ السُّكَّرِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اقْتُلُوا الْحَيَّاتِ كُلَّهُنَّ فَمَنْ خَافَ ثَأْرَهُنَّ فَلَيْسَ مِنِّي»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5249.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4571.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-3984 , அபூதாவூத்-5249 , நஸாயீ-3193 , இப்னு ஹிப்பான்-5630 , அல்முஃஜமுல் கபீர்-9747 , 10355 , 10492 ,
மேலும் பார்க்க: புகாரி-3297 .
சமீப விமர்சனங்கள்