தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5250

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்புகள் பழிவாங்கிவிடும் என பயந்து (அவைகளை கொல்லாமல்) விட்டுவிடுபவர் நம்மை சார்ந்தவர் அல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிட்டதிலிருந்து அவைகளுடன் சமாதானம் செய்ய நாம் தயாரில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

(அபூதாவூத்: 5250)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ، قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أَرَى إِلَى ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ، فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4570.
Abu-Dawood-Shamila-5250.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4572.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அனைவரும் பலமானவர்கள் என்றாலும் ராவீ-45950-மூஸா பின் முஸ்லிம் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்று என்று உறுதியாக அறிவிக்கவில்லை என முன்திரீ இமாம் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அவ்னுல் மஃபூத்)
  • என்றாலும் சில அறிவிப்புகளில் வார்த்தை அமைப்பு உறுதியாக இருப்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளனர்.

7 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பாம்புகளை கொல்வது பற்றி:

1 . பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20524 , அஹ்மத்-2037 , 3254 , அபூதாவூத்-5250 , அல்முஃஜமுல் கபீர்-11801 , 11846 ,

உருமாற்றம் பற்றி:

இது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

2 . பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20524 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19908 , அஹ்மத்-3254 , 3255 , இப்னு ஹிப்பான்-5640 , அல்முஃஜமுல் கபீர்-11946 ,

மேலும் பார்க்க: புகாரி-3297 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.