பாடம் : 194
தொழுகைக்கு நடந்து செல்லும் வழிமுறை.
பள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் கப்பா பின் அஜ்ராவை அபூ சுமாமா வழியில் சந்திக்கின்றார். அவ்வாறு சந்தித்தவர்களில் ஒருவரான அபூசுமாமா அறிவித்ததாவது:
என்னுடைய இருகைகளையும் கோர்த்து கொண்டிருப்பதை கண்டு என்னை அவ்வாறு செய்யாது தடுத்தார். மேலும் உங்களில் ஒருவர் அழகுற உலூச் செய்து, பிறகு பள்ளியை நோக்கி செல்லும் போது தனது கை (விரல்)களையும் கோர்க்க வேண்டாம்! ஏனெனில் அவர் தொழுகையில் ஈடுபட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என்றும் சொன்னார்.
இவ்வாறு ஸஃது பின் இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 562)194 – بَابُ مَا جَاءَ فِي الْهَدْيِ فِي الْمَشْيِ إِلَى الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَهُمْ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ
أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَيَّ، فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ»
AbuDawood-Tamil-.
AbuDawood-Shamila-562.
AbuDawood-JawamiulKalim-.
சலாம்.
இந்த ஹதீஸின் தமிழ் எண் 475 என்பதே சரியானது.