பாடம்: 205
பெண்கள் தொழுவித்தல்.
நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், “உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். போரில் காயப்படுவோருக்கு நான் சிகிச்சை அளிப்பேன். அதனால் அல்லாஹ் எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை தருவான்” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்” எனக் கூறினார்கள்.
இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார்.
(வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு) தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று அவர் எழுதிக் கொடுத்திருந்தார். உமர் (ரலி) காலத்தில் ஒரு நாள் இரவு அவ்விருவரும் அவரை போர்வையால் மூடி கொன்று விட்டு ஓடிவிட்டனர். காலையில் உமர் (ரலி) அவர்கள், இந்த இருவர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால், அல்லது கண்டால் பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். பிறகு கொலையாளிகள் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டனர். மதீனாவில் இவர்கள் தான் முதலில் சிலுவையில் அறையப்பட்டனர்.
என தனது பாட்டியும், அப்துர் ரஹ்மான் பின் அல்கல்லாத் அவர்களும் அறிவித்ததாக வலீத் பின் ஜுமைஃ அறிவித்தார்.
(அபூதாவூத்: 591)بَابُ إِمَامَةِ النِّسَاءِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُمَيْعٍ، قَالَ: حَدَّثَتْنِي جَدَّتِي، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ خَلَّادٍ الْأَنْصَارِيُّ، عَنْ أُمِّ وَرَقَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ الْأَنْصَارِيَّةِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا غَزَا بَدْرًا، قَالَتْ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي الْغَزْوِ مَعَكَ أُمَرِّضُ مَرْضَاكُمْ، لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَنِي شَهَادَةً، قَالَ: «قَرِّي فِي بَيْتِكِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْزُقُكِ الشَّهَادَةَ»، قَالَ: فَكَانَتْ تُسَمَّى الشَّهِيدَةُ، قَالَ: وَكَانَتْ قَدْ قَرَأَتِ الْقُرْآنَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَّخِذَ فِي دَارِهَا مُؤَذِّنًا، فَأَذِنَ لَهَا، قَالَ: وَكَانَتْ قَدْ دَبَّرَتْ غُلَامًا لَهَا وَجَارِيَةً فَقَامَا إِلَيْهَا بِاللَّيْلِ فَغَمَّاهَا بِقَطِيفَةٍ لَهَا حَتَّى مَاتَتْ وَذَهَبَا، فَأَصْبَحَ عُمَرُ فَقَامَ فِي النَّاسِ، فَقَالَ: مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذَيْنِ عِلْمٌ، أَوْ مَنْ رَآهُمَا فَلْيَجِئْ بِهِمَا، فَأَمَرَ بِهِمَا فَصُلِبَا فَكَانَا أَوَّلَ مَصْلُوبٍ بِالْمَدِينَةِ،
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-591.
Abu-Dawood-Shamila-591.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-499.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் வலீத் என்பவரின் பாட்டியான ராவீ-34815-லைலா பின்த் மாலிக் என்ற பெண்ணும், ராவீ-21703-அப்துர் ரஹ்மான் பின் கல்லாத் என்பவரும் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- சில அறிவிப்பாளர்தொடர்களில் வலீத் என்பவரின் பாட்டி உம்மு வரகா (ரலி) என்று இடம்பெற்றுள்ளது. அவை ஏற்கத்தக்கதல்ல என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார்…
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1395, 1/577)
3 . இந்தக் கருத்தில் உம்மு வரகா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-27282 , 27283 , அபூதாவூத்-591 , 592 , இப்னு குஸைமா-1676 , தாரகுத்னீ-1506 , 3202 , 3203 , ஹாகிம்-730 , …
மேலும் பார்க்க: ஹாகிம்-731 .
ஆயிசா அவர்கள் அதான் சொல்பவர்களாகவும் இகாமத் சொல்பவர்களாகவும் பெண்களுக்கு இமாமத் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அவ்வாறு இமாமத் செய்யும் போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்”
(ஹாகிம்:731)
ஆயிசா அவர்கள் ஒரு பர்ளுத் தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் நின்று தொழுவித்தார்கள்”(பைஹகீ-5561)
பெண்களாகிய எங்களுக்கு நடுவில் நின்று உம்மு ஸலமா அவர்கள் எங்களுக்கு தொழுவித்தார்கள்” (இப்னு அபீஷைபா-1:497)
இந்த செய்தியின் அடிப்படையில் பெண்கள் பெண்களுக்கு தொழ வைக்கலாமா? இது அனைத்தும் சரியான செய்திதானா?
Edhu odiye arabi moolam annupavum
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். ஆய்வில்…
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: ஹாகிம்: 731