ஆயிஷா (ரலி) அவர்கள், பாங்கு சொல்பவர்களாகவும்; இகாமத் சொல்பவர்களாகவும்; பெண்களுக்கு தொழுவிப்பவராகவும் இருந்தார்கள். அவர்கள் தொழுகை நடத்தும்போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)
(ஹாகிம்: 731)حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْأَصَمُّ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ الْعُطَارِدِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ لَيْثٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ،
أَنَّهَا كَانَتْ «تُؤَذِّنُ، وَتُقِيمُ، وَتَؤُمُّ النِّسَاءَ، وَتَقُومُ وَسْطَهُنَّ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-731.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-684.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4133-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்ஜப்பார் அல்உதாரிதிய்யி பலவீனமானவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/ 93)
- மேலும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- பெண்கள் ஆண்களுக்கு தலைமை ஏற்று தொழவைப்பது கூடாது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
- பெண்கள், பெண்களுக்கு தலைமை ஏற்று கடமையான தொழுகையை தொழவைக்கலாமா? என்ற விசயத்தில் அறிஞர்களிடம் இரு வகையான கருத்துக்கள் உள்ளன.
1 . சிலர், மேற்கண்ட-நபித்தோழர்களின் நடைமுறை பற்றிய-செய்திகளின் அடிப்படையில் பெண்கள் பெண்களுக்கு தொழுகை நடத்தலாம் என்று கூறுகின்றனர். (இவைகளில் சிலவை பலவீனமானதாக இருந்தாலும் சிலவை சரியாக உள்ளன. பார்க்க: தாரகுத்னீ-1507 )
- நபித்தோழர்களின் செயல் மார்க்க ஆதாரமாகாது என்ற கருத்தின் அடிப்படையில் உள்ளோர் பெண்கள், பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை நடத்தலாம் என்றோ, நடத்தக் கூடாது என்றோ சொல்லப்படவில்லை என்பதால் இதில் தவறில்லை என்று முடிவு செய்கின்றனர்.
2 . சிலர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் தான் ஜமாஅத் தொழுகையில் கலந்து தொழுதுள்ளனர். பெண்கள், பெண்களுக்கு தொழவைக்கும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்பதால் அவ்வாறு தொழவைக்க கூடாது. ஒன்று தனியாக தொழ வேண்டும். அல்லது பள்ளிவாசலுக்கு சென்று ஆண் இமாமைப் பின்பற்றித்தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஃ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2323 , 2327 , 4954 , 4991 , ஹாகிம்-731 , குப்ரா பைஹகீ-1922 , 5356 ,
- ஸவ்ரீ —> மைஸரா —> ரைத்தா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5086 , தாரகுத்னீ-1507 , குப்ரா பைஹகீ-5355 ,
- தாவூஸ் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5015 , 5016 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2322 , 2341 ,
- இப்னு ஜுரைஜ் —> யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.—> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5087 ,
- இப்னு ஜுரைஜ் —> அதாஃ
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5015 ,
2 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரகுத்னீ-1508 .
3 . உம்மு வரகா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-591 .
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்