தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-63

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 33

தண்ணீரை அசுத்தமாக்குபவை.

நபி (ஸல்) அவர்களிடம் கால் நடைகள், ‎வனவிலங்குகள் (அடிக்கடி) வந்து (குடித்துவிட்டு மீதம்வைத்துவிட்டு) செல்லும் தண்ணீரை பற்றி கேட்டபோது, அதற்கு ‎நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத்களை அடைந்து விட்டால் ‎அசுத்தங்களால் அது பாதிப்படையாது என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது முஹம்மது பின் அலா அறிவிக்கும் வார்த்தையாகும்.

உஸ்மான் பின் ‎அபூஷைபா, ஹஸன் பின் அலீ ஆகியோர், முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஃபர் ‎அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். இதுதான் சரியானதாகும்…

(அபூதாவூத்: 63)

33- بَابُ مَا يُنَجِّسُ الْمَاءَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُهُمْ، قَالُوا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»

قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا لَفْظُ ابْنُ الْعَلَاءِ، وَقَالَ عُثْمَانُ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ: عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ الصَّوَابُ،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-63.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-58.




(தமிழ் மொழியாக்கம் செய்தவரின் குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
திர்மிதீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இப்னு ‎ஹிப்பான், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற நூல்களில் காணப்படுகிறது. எனினும் இது ‎பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவிதமான குளறுபடிகள் ‎உள்ளன. அதுபோலவே ஹதீஸிலும் பல்வேறு குழப்பமான வார்த்தைகள் ‎காணப்படுகின்றன. சில அறிவிப்புகளில் ஒரு குல்லத் என்றும் மற்றும் சில ‎அறிவிப்புகளில் இரண்டு குல்லத் என்றும் வேறு சில அறிவிப்புகளில் மூன்று குல்லத் ‎என்றும் இன்னும் சில அறிவிப்புகளில் நாற்பது குல்லத் என்றும் கூறப் படுகின்றது. ‎திட்டவட்டமான ஒரு முடிவை இந்த ஹதீஸ்களிலிருந்து பெற முடியவில்லை. ‎மேலும் குல்லத் என்பது ஒலு அளவு என்பதில் மட்டுமே கருத்தொற்றுமை உள்ளது. ‎குல்லத் என்றால் எவ்வளவு என்பதற்கு ஹதீஸ்களில் குறிப்பிட்ட அளவு எதுவும் ‎கிடைக்கவில்லை. அதனால் நாமும் குல்லத் என்பதற்கு மொழி பெயர்ப்பு செய்ய ‎முடியவில்லை) 


இந்த செய்தி பற்றி விரிவான விளக்கம் உள்ளது. சில அறிஞர்கள் இதை குளறுபடியானது, பலவீனமானது என்று கூறினாலும் சில ஆய்வாளர்கள் எந்தெந்த செய்திகளுக்கு முன்னுரிமை (தர்ஜீஹ்) தரவேண்டும் என்பதை விளக்கி இதை சரியானது என்று கூறுகின்றனர். இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.

இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-63 , நஸாயீ-52 ,

…அஹ்மத்-4605 , 4753 , 4803 , 4961 , 5855 , தாரிமீ-758 , 759 , இப்னு மாஜா-517 , 518 , திர்மிதீ-67 , நஸாயீ-328 ,

…இப்னு குஸைமா-92 , இப்னு ஹிப்பான்-1249 , 1253 , தாரகுத்னீ-01 , 02 , 03 , 04 , 05 , 06 , 07 , 08 , 09 , 10 , 11 , 12 , 13 , 14 , 15 , 16 , 17 ,

2 comments on Abu-Dawood-63

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.
      இந்தச் செய்தியை சிலர் சரியானது என்றும், சிலர் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.

      இந்த செய்தி பற்றி விரிவான விளக்கம் உள்ளது. சில அறிஞர்கள் இதை குளறுபடியானது, பலவீனமானது என்று கூறினாலும் சில ஆய்வாளர்கள் எந்தெந்த செய்திகளுக்கு முன்னுரிமை (தர்ஜீஹ்) தரவேண்டும் என்பதை விளக்கி இதை சரியானது என்று கூறுகின்றனர். இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.