பாடம்:
ஆடை குறுகியதாக இருந்தால், அதை இடுப்பில் கட்டிக்கொள்வது.
உபாதா பின் வலீத் பின் உபாதா பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம்.
அவர்கள் கூறினார்கள்:
“நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழ நின்றார்கள். என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதன் இரண்டு ஓரங்களையும் சேர்த்துப் போட முயன்றேன். ஆனால் அது எனக்குப் போதுமானதாக இல்லை. அதில் சில கிழிசல்கள் இருந்தன. அதனால் நான் அதைத் தலைகீழாகப் போட்டு, பிறகு அதன் இரண்டு ஓரங்களையும் சேர்த்துப் போட்டேன். அது விழாதவாறு அதன் மேல் சாய்ந்து கொண்டேன்.
பிறகு நான் வந்து நபி (ஸல்) அவர்களின் இடதுபுறம் நின்றேன். அப்போது அவர்கள் என் கையைப் பிடித்து, என்னைச் சுற்றி, தங்கள் வலதுபுறம் நிற்க வைத்தார்கள். இப்னு ஸக்ர் வந்து, அவர்களின் இடதுபுறம் நின்றார். அப்போது அவர்கள் எங்கள் இருவரின் கைகளையும் பிடித்து, எங்களை தங்களுக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் அதை உணரவில்லை. பிறகு நான் அதை உணர்ந்து கொண்டேன். அவர்கள் அதைக் கொண்டு இடுப்புக்குக் கட்டும்படி எனக்கு சைகை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தபோது, ‘ஜாபிரே!’ என்று கூறினார்கள். நான் ‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினேன். அவர்கள், ‘அது அகலமானதாக இருந்தால், அதன் இரண்டு ஓரங்களையும் ஒன்று சேர்த்துப் போடு. அது குறுகியதாக இருந்தால், அதை உன் இடுப்புடன் இறுக்கிக் கட்டு’ என்று கூறினார்கள்.
(அபூதாவூத்: 634)بَابُ إِذَا كَانَ الثَّوْبُ ضَيِّقًا يَتَّزِرُ بِهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، وَيَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، قَالُوا: حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ:
أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: سِرْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَقَامَ يُصَلِّي، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ذَهَبْتُ أُخَالِفُ بَيْنَ طَرَفَيْهَا فَلَمْ تَبْلُغْ لِي، وَكَانَتْ لَهَا ذَبَاذِبُ فَنَكَّسْتُهَا، ثُمَّ خَالَفْتُ بَيْنَ طَرَفَيْهَا، ثُمَّ تَوَاقَصْتُ عَلَيْهَا لَا تَسْقُطُ، ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي، حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ فَجَاءَ ابْنُ صَخْرٍ، حَتَّى قَامَ عَنْ يَسَارِهِ فَأَخَذَنَا بِيَدَيْهِ جَمِيعًا، حَتَّى أَقَامَنَا خَلْفَهُ، قَالَ: وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُنِي وَأَنَا لَا أَشْعُرُ ثُمَّ فَطِنْتُ بِهِ فَأَشَارَ إِلَيَّ أَنْ أَتَّزِرَ بِهَا فَلَمَّا فَرَغَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَا جَابِرُ»، قَالَ: قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِذَا كَانَ وَاسِعًا فَخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ، وَإِذَا كَانَ ضَيِّقًا فَاشْدُدْهُ عَلَى حِقْوِكَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-539.
Abu-Dawood-Shamila-634.
Abu-Dawood-Alamiah-539.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்