தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-679

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ், நரகத்தில் (இருந்து வெளியேற்றப்படுவர்களை விட்டும்) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 679)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ فِي النَّارِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-679.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-580.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28713-இக்ரிமா பின் அம்மார் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். அதிலும் இவர் யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிக்கும் செய்திகளில் குளறுபடி உள்ளது என்பதால் இவற்றை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    பலவீனமானவை என்று கூறியதாக இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோரும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/132)

  • மேலும் இதில் ஃபின்னார்- நரகத்தில் என்ற வார்த்தை பலமானவருக்கு மாற்றமாக அறிவித்திருப்பதால் இது முன்கர் என்ற வகையில் பலவீனமானதாகும்.

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஆரம்பத்தில் (ஸஹீஹ் அபூதாவூதில்) சரியானது என்று கூறினாலும் பிறகு ஃபின்னார் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பது பலவீனமானது என்று ஸஹீஹுத் தர்கீபின் அடிக்குறிப்பில் கூறியுள்ளார். (ஸஹீஹுத் தர்கீப்-510)

2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2453 , அபூதாவூத்-679 , இப்னு குஸைமா-1559 , இப்னு ஹிப்பான்-2156 , குப்ரா பைஹகீ-5198 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.