பாடம்:
தொழுகையில் இருகைகளையும் உயர்த்துதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவதையும், இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தாமலிருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், (இந்த செய்தியை அறிவிக்கும் போது) ஒரு தடவை “ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது” என்று அறிவித்தார். அவர் அதிகமாக “ருகூவிலிருந்து தலையை உயர்த்தியப் பின்” என்றே அறிவித்துள்ளார்.
(அபூதாவூத்: 721)بَابُ رَفْعِ الْيَدَيْنِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ:
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَبَعْدَمَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ –
وَقَال سُفْيَانُ مَرَّةً: وَإِذَا رَفَعَ رَأْسَهُ وَأَكْثَرُ مَا كَانَ يَقُولُ: وَبَعْدَ مَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ –
وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-721.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-618.
சமீப விமர்சனங்கள்