தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-763

---


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி” (அல்லாஹ் மிகப்பெரியவன். தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்? அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அது நான் தான். நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்” எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் அவர்கள், “உங்களில் ஒருவர் (ஜமாஅத் தொழுகை நடைபெரும் சமயம்) வரும் போது இயல்பாகவே நடந்து வரட்டும். (இமாமுடன்) கிடைத்த ரக்அத்களை தொழுதுக் கொள்ளட்டும். தவறியதை பிறகு தொழட்டும் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறியதாக (கூடுதலாக) அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 763)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ، وَحُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى الصَّلَاةِ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ، فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ وَقَدْ حَفَزَنِيَ النَّفَسُ فَقُلْتُهَا، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا»

وَزَادَ حُمَيْدٌ فِيهِ: «وَإِذَا جَاءَ أَحَدُكُمْ فَلْيَمْشِ نَحْوَ مَا كَانَ يَمْشِي فَلْيُصَلِّ مَا أَدْرَكَهُ وَلْيَقْضِ مَا سَبَقَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-763.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-649.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுமைத், கத்தாதா (ரஹ்) போன்றோர் தத்லீஸ் செய்பவர்கள் என்றாலும் ஸாபித் (ரஹ்) அவர்கள் தத்லீஸ் செய்யாதவர்.
  • மேலும் ஹம்மாத் பின் ஸலமா இறுதிகாலத்தில் சிறிது நினைவாற்றலில் குறை ஏற்பட்டவர் என்ற விமர்சனம் இருந்தாலும் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹம்மாத் பின் ஸலமா மிக பலமானவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1499)

எனவே இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-1051 .

4 comments on Abu-Dawood-763

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.