அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி” (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்” எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
(முஸ்லிம்: 1051)باب فضل قول الحمد لله حمدًا كثيرًا طيبًا
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا قَتَادَةُ، وَثَابِتٌ، وَحُمَيْدٌ، عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟» فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟ فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا» فَقَالَ رَجُلٌ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَرْفَعُهَا»
Tamil-1051
Shamila-600
JawamiulKalim-947
ஹதீஸின் தரம்: ளயீஃப் – பலவீனமான செய்தி
விமர்சனத்துக்கு காரணம் தரவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மன்னிக்கவும். தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. மாற்றுகிறோம். ஜஸாகல்லாஹு கைரா.
வ அலைக்கும் ஸலாம்.
ஜஸாகல்லாஹு கைரா.
இந்த ஹதீஸில் “ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து” எனும் வாசகம் வருகிறது. புகாரீ 799 https://tamil.quranandhadis.com/bukhari-799/ இடம் பெரும் ஹதீஸில் அவ்வாசகம் இல்லை. இரு ஹதீஸிலும் வாணவர் எண்ணிக்கை வேரு. இந்த ஹதீஸில் தொழுகை வரிசையில் சேர்ந்த அம் மனிதர் (ஸஹாபி) அல்லாஹு அக்பர் என்று சொல்லி தொழுகையில் சேர்ந்ததாக இல்லை. இது ஏட்கத்தக்கதா? இப்படி சேரலாமா? தொழுகையின் திரவுகோள் அல்லாஹு அக்பர் அல்லவா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபூதாவூத்-763 எண்ணிலும், வேறு சில அறவிப்பாளர்தொடரிலும் அல்லாஹு அக்பர் கூறியதாக இடம்பெற்றுள்ளது..