தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-799

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ரிஃபாஆ இப்னு ராஃபிவு (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறினார்கள்.

அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’ என்று கூறினார். தொழுது முடித்ததும் ‘இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?’ என்று நபி (ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் ‘நான்’ என்றார். ‘முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 799)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ المُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ

كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «مَنِ المُتَكَلِّمُ» قَالَ: أَنَا، قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ»


Bukhari-Tamil-799.
Bukhari-TamilMisc-799.
Bukhari-Shamila-799.
Bukhari-Alamiah-757.
Bukhari-JawamiulKalim-760.




2 . இந்தக் கருத்தில் ரிஃபாஆ பின் ராஃபிவு (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-565 , அஹ்மத்-18996 , புகாரி-799 , அபூதாவூத்-770 , 773 , திர்மிதீ-404 , நஸாயீ-931 , 1062 , …

மேலும் பார்க்க: முஸ்லிம்-1051 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.