தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-830

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

படிப்பறிவு இல்லாதோருக்கும், அரபியல்லாதோருக்கும் ஓதும் முறையில் குறைந்த பட்ச அளவு.

அரபுகளும், வேற்றுமொழியினரும் கலந்திருந்து நாங்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த போது எங்களிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கல், நீங்கள் ஓதுங்கள்! அனைவர் ஓதுவதும் அழகாக உள்ளன. ஈட்டி சீர்படுத்தப்படுவது போல் குர்ஆனைச் சீர்படுத்துவோர் தோன்றுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அதன் கூலியை எதிர்பார்ப்பார்கள். மறுமையில் எதிர்பர்க்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(அபூதாவூத்: 830)

بَابُ مَا يُجْزِئُ الْأُمِّيَّ وَالْأَعْجَمِيَّ مِنَ الْقِرَاءَةِ

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:

خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ، فَقَالَ: «اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-830.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-707.




  • இந்த செய்தியை முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுமைத் என்பவரும், உஸாமா பின் ஸைத் என்பவரும் ஜாபிர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக கூறியுள்ளனர். முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களும்,
    ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்களும் முன்கதிர் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக கூறியுள்ளனர்.
  • இடையில் நபித்தோழர் விடுப்பட்டு வரும் செய்திகளை அறிவிப்பவர்கள் மிக பலமானவர்கள் என்பதால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இந்த செய்தியை முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3209)

  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-259)

1 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) —> ஜாபிர் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: ஸுனன் ஸயீத் பின் மன்ஸூர்-31 , அஹ்மத்-14855 , 15273 , அபூதாவூத்-830 ,  முஸ்னத் அபீ யஃலா-2197 ,

  • ஸயீத் —> ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    —> முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: ஸுனன் ஸயீத் பின் மன்ஸூர்-30 ,

  • அப்துர்ரஸ்ஸாக் —> ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    —> முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6034 ,

  • வகீஉ —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> முஹம்மது பின் முன்கதிர் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30004 ,

2 . ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-831 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-12484 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.