தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-856

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்து, (அவசர அவசரமாகத்) தொழ ஆரம்பித்தார். (அவர் தொழுது முடித்த பின்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸலாம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பதில் ஸலாம் கூறிவிட்டு, “திரும்பவும் சென்று நீர் தொழுவீராக; நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு தொழுததைப் போன்றே தொழுதுவிட்டு மறுபடியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்மீது சாந்தி உண்டாகட்டும்!” என்று சொல்லிவிட்டு, “திரும்பவும் நீர் தொழுவீராக; நீர் தொழவே இல்லை” என்று மீண்டும் சொன்னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்.

அதற்கு அம்மனிதர், “சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த முறையில் தொழுவதைத் தவிர வேறு எதையும் நான்
அறிந்திருக்கவில்லை. எனவே, (தொழும் முறையை) எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் தொழுகைக்கு நின்றால் தக்பீர் கூறியபின் குர்ஆனில் உமக்குத் தெரிந்த (இலகுவான)தை ஓதுவீராக. பின்னர் அமைதியாக ருகூஉ செய்வீராக. பின்னர் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி – நேராக, நிம்மதியாக நிற்பீராக! பின்பு நிதானமாக ஸஜ்தா செய்வீராக. பின்பு (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) நிம்மதியாக அமர்வீராக. இவ்வாறே உமது தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இந்த நபிமொழி ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பார்க்க: அபூதாவூத்-856, 857858859860861)

அபூதாவூத்-856 இல் உள்ள இந்தச் செய்தி, இரண்டு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. முதல் அறிவிப்பு, யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து இப்னுல் முஸன்னா அறிவிக்கும் மேற்கண்ட பகுதியாகும்.

யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து கஃனபீ (அப்துல்லாஹ் பின் மஸ்லமா) அறிவிக்கும் இரண்டாம் அறிவிப்பின் கடைசியில்…

“(இப்போது கூறப்பட்டபடி) நீ செய்தால் உமது தொழுகை முழுமையாகிவிடும். இவற்றில் நீ ஏதேனும் குறை செய்தால் அது உமது தொழுகையில் ஏற்பட்ட குறையாகும். மேலும், நீர் தொழுகைக்கு நின்றால் அங்கத் தூய்மை முழுமையாகச் செய்துகொள்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் (என்று இடம்பெற்றுள்ளது).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 856)

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا أَنَسٌ يَعْنِي ابْنَ عَيَّاضٍ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، وَهَذَا لَفْظُ ابْنِ الْمُثَنَّى، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلَامَ، وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ الرَّجُلُ، فَصَلَّى كَمَا كَانَ صَلَّى، ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ السَّلَامُ»، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مِرَارٍ، فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أُحْسِنُ غَيْرَ هَذَا فَعَلِّمْنِي، قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ اجْلِسْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا»،

قَالَ الْقَعْنَبِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ فِي آخِرِهِ: «فَإِذَا فَعَلْتَ هَذَا فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ، وَمَا انْتَقَصْتَ مِنْ هَذَا شَيْئًا، فَإِنَّمَا انْتَقَصْتَهُ مِنْ صَلَاتِكَ»، وَقَالَ فِيهِ: إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ


Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-856.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.




மேலும் பார்க்க: புகாரி-757 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.