அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் முகமன் (ஸலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) சொல்லிவிட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘ஸலாம்’ சொன்னார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த்தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (குனிந்ததும் நிமிர்ந்துவிடாமல்) நன்கு நிலை கொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்த நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக!
பின்னர் ஸஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! இதையே (இதே வழிமுறையையே) உம்முடைய எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
அத்தியாயம்: 10
(புகாரி: 757)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»
Bukhari-Tamil-757.
Bukhari-TamilMisc-757.
Bukhari-Shamila-757.
Bukhari-Alamiah-715.
Bukhari-JawamiulKalim-718.
- தொழுகையை சரியாக தொழாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை கற்றுத்தந்த இந்த செய்தி பலவகையான அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- இவற்றில் முக்கியமானவை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் மேற்கண்ட செய்திகளாகும். இது புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்ற பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழுகையில் எவை கட்டாயமானவை? எவை ஸுன்னத்தானவை? என்பதற்கு இந்த வகை ஹதீஸ்களையே ஃபுகஹாக்கள் எனும் மார்க்க சட்டமேதைகள் முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர். - ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) வழியாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. இந்தச் செய்தியின் மதார்-அஸல் அறிவிப்பாளர் அலீ பின் யஹ்யா ஆவார். அதாவது இவரிடமிருந்து தான் மற்ற அதிகமானோர் இந்த செய்தியை அறிவித்துள்ளனர். மேலும் பலவகையான அறிவிப்பாளர்தொடரிலும்; வார்த்தை அமைப்புகளில் கூடுதலாகவும், குறைவாகவும் அறிவித்துள்ளனர். - இவற்றில் கூடுதலான கருத்தை அறிவிக்கும் சில அறிவிப்பாளர்களின் செய்திகள், அவர்களின் தரத்தின் அடிப்படையில் ஏற்கப்படும் அல்லது மறுக்கப்படும்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-757 , 793 , 6252 , முஸ்லிம்-, அபூதாவூத்-856 , திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,
- ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, புகாரி-6251 , 6667 , முஸ்லிம்-663 , இப்னு மாஜா-1060 , 3695 , திர்மிதீ-2692 , இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
…
2 . ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-858 .
…
சமீப விமர்சனங்கள்